For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் டிராபிக் ஜாமில் சிக்கிய ஆம்புலன்ஸ் செல்ல உதவிய மாஜி ராணுவ வீரரை தாக்கிய எஸ்.ஐ.

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் செல்ல உதவிய முன்னாள் ராணுவ வீரரை போக்குவரத்து எஸ்.ஐ. திட்டி, தாக்கியுள்ளார்.

பெங்களூர் நகரம் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர்போனது. இந்நிலையில் பெங்களூர் சதாசிவ நகரில் உள்ள காவிரி ஜங்கஷனில் ரத்தம் ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை சென்ற ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. காலையில் மழை பெய்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதை பார்த்த முன்னாள் ராணுவ வீரர் நாகப்பா அதிர்ச்சி அடைந்தார்.

{ventuno}

உடனே அவர் ஆம்புலன்ஸ் செல்ல சாலையை பிரிக்கும் டிவைடராக இருந்த கயிறை அவிழ்த்துவிட்டுள்ளார். இதற்கு அவர் அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரிடம் அனுமதி பெற்றுள்ளார்.

நாகப்பா கயிறை அவிழ்த்துவிட்டதை பார்த்த மற்றொரு போக்குவரத்து எஸ்.ஐ. ரங்கண்ணா கோபம் அடைந்தார். அவர் நாகப்பாவை திட்டியதுடன், அனைவர் முன்பும் அவரை தாக்கினார்.

இந்த சம்பவத்தையடுத்து ரங்கண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
An ex-serviceman who played a good samaritan was allegedly assaulted and verbally abused by a traffic Sub-Inspector for making way for an ambulance stuck in a traffic jam at a busy junction in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X