For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகார்: ஐக்கிய ஜனதா தள அலுவலகத்துக்கு பார்சலில் வந்த குண்டு வெடித்து ஒருவர் பலி!

By Mathi
Google Oneindia Tamil News

கயா: பீகாரில் உள்ளூர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அலுவலகத்துக்கு பார்சலில் அனுப்பி வைக்கப்பட்ட குண்டுவெடித்து ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் அரசுக்கு எதிராக 2 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதை மீறி அங்கு இயக்கப்பட்ட வாகனங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

One killed in parcel bomb blast at JD(U) leader’s house

கயா மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 32 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நிலையில் கயாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உள்ளூர் தலைவர் அபய் குஷாவாவுக்கு பார்சல் ஒன்று வந்தது. அதை அபயின் உதவியாளர் எடுத்து பிரித்து பார்த்தார்.

அபபோது அந்த பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த உதவியாளர் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்.

இது ஐக்கிய ஜனதா தள தலைவர் கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

English summary
A parcel bomb sent to the house of ruling party Janata Dal-United Gaya district chief Abhay Kushwaha exploded on Tuesday morning killing one person.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X