For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியுடன் இன்று இரவு பேசுகிறார் டொனால்டு ட்ரம்ப் !

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு பேசுகிறார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடுகிறார்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற 4வது நாளான இன்று இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச உள்ளார்.

 Phone pe charcha: Trump to speak with Modi tonight

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்க நேரப்படி இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் இந்த உரையாடல் நடைபெறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக டொனால்டு ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப், பதவியேற்ற மறுநாள் (ஜனவரி 21) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்யூ மற்றும் மெக்ஸிகன் அதிபர் பெனா நீட்டோவுடன் தொலைபேசியில் பேசினார். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அதனைத் தொடர்ந்து நேற்று எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி-யை டிரம்பு தொடர்பு கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

English summary
the White House said. "The president speaks with Indian Prime Minister, Narendra Modi," the White House said as it released Trump's schedule for Tuesday. Trump is scheduled to speak with Modi over phone at 1 pm Washington DC time, which is 11:30 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X