For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி... ஜெய்பூர் குழந்தைக்கு பெயர் வைத்த பெற்றோர்- வாழ்த்திய வசுந்தராஜே சிந்தியா

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த ஜூன் 30 நள்ளிரவு அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு ஜிஎஸ்டி என்று பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நேரத்தில் குழந்தை பிறந்ததால் அதற்கு ஜிஎஸ்டி என்று பெற்றோர்கள் பெயர் வைத்துள்ளனர்.

கவுண்டமணியிடம் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்லி கேட்பார். வாயில் வருவது போல பெயர் வைங்கண்ணே என்று கேட்டதற்கு 'வாந்தி' என்று வை, நல்லா வரும் என்பார். அதுபோல இந்தியாவே உச்சரிக்கும் ஒரு பெயரை பிறந்த குழந்தைக்கு வைத்துள்ளார் ஜெய்ப்பூரை சேர்ந்த தாய் ஒருவர்.

Woman gives birth on June 30 midnight, names baby 'GST'

நாடு முழுவதும் கடந்த ஜூன் 30 ஆம் தேதி இரவு ஒரு நாடு ஒரே வரி என்ற பெயரில் ஜிஎஸ்டி வரியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் அறிமுகம் செய்து வைத்தனர்.

அப்போது பேசிய மோடி, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிகப்பெரிய பொருளாதார மாற்றத்திற்குள் சென்றுள்ளது. கங்கா நகரில் இருந்து இட்டாநகர் மற்றும் லேவில் இருந்து லட்சத்தீவு வரை அனைத்து இடங்களிலும் ஒரே வரிதான் இனி என்றார். புதிய இந்தியா பிறந்துள்ளது என்று கூறினார் மோடி.

மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, அன்று இரவு 12.02 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பீவா என்ற இடத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியடைந்த அந்தக் குழந்தையின் தாய் குழந்தைக்கு உடனே ஜிஎஸ்டி பெயர் வைத்தார்.

முதல்வர் வாழ்த்து.

இந்த செய்தியை ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா டுவீட் செய்துள்ளார். ''நீண்ட ஆயுள் பெற்று, ஆரோக்கியத்துடன் வாழ்க என்று வாழ்த்தியுள்ளார்.

நல்லா வைக்கிறாங்கப்பா பேரு...

English summary
A woman in Beawar, Rajasthan, named her newborn baby 'GST', after it was born on June 30 midnight while the new tax structure was being launched. Rajasthan CM Vasundhara Raje congratulated the woman, tweeting, "Live long & healthy Baby GST!"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X