For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டில் 'மேக் இன் இந்தியா', உள்நாட்டில் 'ஹேட் இன் இந்தியா': லோக்சபாவில் சசிதரூர் 'நச்'

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உள்நாட்டில் 'ஹேட் இன் இந்தியா' (இந்தியாவிற்குள் வெறுப்பு)வை வைத்துக்கொண்டு, வெளிநாட்டில் மேக் இன் இந்தியா பற்றி வாக்குறுதி கொடுக்க முடியாது என்று லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டினார்.

சகிப்பின்மை குறித்து இன்று லோக்சபாவில் விவாதம் நடந்தது. அதில், திருவனந்தபுரம் எம்.பியான சசிதரூர் பேசியதாவது: சகிப்பின்மை சர்ச்சையால், நமது நாட்டின் மதிப்பு வெளிநாட்டில் கெட்டுப்போயுள்ளது. வெளிநாட்டு ஊடகங்களும், இந்தியாவில் சகிப்பின்மை இருப்பதாக செய்திகள் வெளியிட்டுவருவது நமக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.

You cannot promote 'Make in India' abroad and have 'Hate in India' at home: Shashi Tharoor

உள்நாட்டில் 'ஹேட் இன் இந்தியா' (இந்தியாவிற்குள் வெறுப்பு)வை வைத்துக்கொண்டு, வெளிநாட்டில் மேக் இன் இந்தியா பற்றி வாக்குறுதி கொடுக்க முடியாது.

முஸ்லிம்களை விட பசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது தேச பாதுகாப்புக்கு உலை வைத்துவிடும். இவ்வாறு சசி தரூர் பேசினார்.

குறுக்கிட்ட உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு "இந்தியாவில் சகிப்பின்மை என்ற ஒன்று இருக்குமானால் அது 1975ம் ஆண்டு கொண்டு வந்த எமர்ஜென்சி மட்டும்தான். சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை 27 வருடங்கள் முன்பு தடை செய்தது காங்கிரஸ். அது தவறு என இப்போது காங்கிரஸ் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகிறார்" என்றார்.

முன்னதாக பூஜ்ய நேரத்தில் பேசிய சசி தரூர் "இந்தியாவில் மரண தண்டனையை நீக்க வேண்டும். முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாட்டில் மரண தண்டனை அமலில் இருப்பது பொருத்தமாக இல்லை. மேலும் விளிம்பு நிலை மக்கள்தான் மரண தண்டனையால் பாதிக்கப்படுகிறார்கள். மரண தண்டனையை அகற்றினால்தான் அது காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும்" என்றார்.

English summary
You cannot promote 'Make in India' abroad and have 'Hate in India' at home, Shashi Tharoor told in Loksabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X