For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கல்லாப் பெட்டி"யோடு ஊரை விட்டு ஓடிப் போன 25 வயது கவர்ச்சி மேயர்!

Google Oneindia Tamil News

சாவோ பாலோ: பிரேசிலில் 25 வயதான இளம் பெண் மேயர் ஒருவர் மக்களின் வரிப்பணத்தை களவாடிக் கொண்டு ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார். அவர் நாட்டை விட்டு வெளியேறிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரைப் பிடித்து கைது செய்ய பிரேசில் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

படு கவர்ச்சியான இந்த மேயர் மேயர் போலவே செயல்பட்டதில்லையாம். எப்போதும் ஃபுல் மேக்கப்புடன் வலம் வந்த இவர் ஒருமுறை கூட அலுவலகத்திற்கு வந்ததில்லையாம்.

மாறாக வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ்., பேஸ்புக் மூலமாக தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வேலை வாங்கி வந்துள்ளார். இந்த மேயர் தற்போது 40 லட்சம் டாலர் பணத்துடன் தப்பி ஓடி விட்டாராம்.

போம் ஜார்டிம் நகர மேயர்

போம் ஜார்டிம் நகர மேயர்

இவர் போம் ஜார்டிம் என்ற நகரின் மேயராக இருக்கிறார். இவரது பெயர் லிடியான் லெய்ட்டே. 25 வயதுதான் ஆகிறது. நாட்டிலேயே மிக மிக வறிய நிலையில் உள்ள மரன்ஹோ என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்த மேயரே கூட ஒரு காலத்தில் வறுமையில் வாடியவர்தானாம்.

எல்லாமே வாட்ஸ் ஆப்தான்

எல்லாமே வாட்ஸ் ஆப்தான்

இந்த மேயரின் செயல்பாடுகள் ரொம்பவே தினுசானது. எப்போது பார்த்தாலும் செல்போனும் கையுமாக, செல்பி எடுப்பதுமாக இருப்பாராம். வாட்ஸ் ஆப்பில்தான் தனது அதிகாரிகள், கவுன்சிலர்களுடன் இவர் தொடர்பு வைத்திருப்பாராம். போனில் கூட பேச மாட்டாராம்.

12 நாட்களாகி விட்டது தப்பி

12 நாட்களாகி விட்டது தப்பி

கடந்த 12 நாட்களாக இவரைக் காணவில்லை. எங்கு போனார் என்று தெரியவில்லை. நாட்டை விட்டுத் தப்பிச் சென்று விட்டதாக போலீஸார் நம்புகிறார்கள்.

சொகுசு வாழ்க்கை

சொகுசு வாழ்க்கை

இவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். எப்போதும் பணத்தை வாரியிறைத்து செலவிட்டு வந்துள்ளார். ஆடம்பரமான உடைகள், ஃபுல் மேக்கப்புடன் வலம் வருதல், மது அருந்துதல், நடன விடுதிகளுக்குப் போவது என சொகுசாக வாழ்ந்து வந்தார்.

ஊர் சுற்றுவது முக்கியமானது

ஊர் சுற்றுவது முக்கியமானது

ஊர் சுற்றுவதுதான் இவரது முக்கிய வேலையாக இருந்துள்ளது. எப்போதும் ஆண் நண்பர்களுடன்தான் இருப்பாராம். தனது பெர்சனல் டிரெய்னருடன் அடிக்கடி செல்பி எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடுவதை உப தொழிலாக வைத்துள்ளார்.

பட்டை நாமம் சாத்தப்பட்ட மக்கள்

பட்டை நாமம் சாத்தப்பட்ட மக்கள்

இவர் மேயராக இருந்து வந்த ஊரில் மொத்தம் 39,000 பேர் வசிக்கிறார்கள். ஊழல் மலிந்த நகரம் இது. வறுமை தாண்டவமாடுகிறது. இந்த நிலையில் மேயர் காணாமல் போனதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல லட்சம் பணத்துடன் மாயம்

பல லட்சம் பணத்துடன் மாயம்

இவர் போகும்போது 40 லட்சம் டாலர் பணத்தையும் திருடிக் கொண்டு போய் விட்டார். இது அந்த நகர பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட மக்கள் பணமாகும். இந்தப் பணத்தை பள்ளிகளுக்காக செலவிடாததால் பள்ளிக் கூடங்கள் செயல்பட முடியாத நிலைக்குப் போய் விட்டன. ஆசிரியர்கள் சம்பளத்தைப் பார்த்தே பல மாதங்களாகி விட்டதாம்.

எல்லாத்துக்கும் காரணம் பாய் பிரண்ட்

எல்லாத்துக்கும் காரணம் பாய் பிரண்ட்

இந்த ஆடம்பர சொகுசு மேயர் அந்தப் பதவிக்கு வரக் காரணமே அவரது பாய் பிரண்டும், முன்னாள் மேயரும், அரசியல் ஆலோசகருமான பெடோ ரோச்சாதான் என்கிறார். அவரிடம்தான் இவர் உதவியாளராக இருந்துள்ளார். பெடோ மீது ஊழல் புகார்கள் இருந்ததால் அவர் போட்டியிட முடியாமல் போனது. உடனே தனது காதலியைக் களம் இறக்கி ஜெயிக்க வைத்து விட்டார் போடோ.

ஊரிலேயே இருந்ததில்லை

ஊரிலேயே இருந்ததில்லை

மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் கூட அவர் போம் ஜார்டிம் நகரில் ஒரு நாள் கூட தங்கியதில்லை. மாறாக தான் வசித்து வந்த சாவோ லூயிஸ் நகர தலைநகரில்தான் தங்கியிருந்தார். இது போம் ஜார்டிம் நகரிலிருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும்.

பிடிச்சு ஜெயில்ல போடுங்க

பிடிச்சு ஜெயில்ல போடுங்க

இவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த மூலைக்குப் போனாலும் சரி அவரை விடாதீர்கள், பிடித்துக் கைது செய்யுங்கள் என்று பிரேசில் அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம்.

English summary
A GLAMOROUS young mayor in Brazil is on the run, accused of embezzling education funds and running her town remotely through WhatsApp. An arrest warrant has been issued for Bom Jardim mayor Lidiane Leite, 25, who authorities believe stole funds earmarked for schools in her town, which is in the Brazilian state of Maranhao, one of the country’s poorest regions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X