ஜெயலலிதா விரைவில் குணமடைய ஸ்டாலின், வைகோ வாழ்த்து

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற இயற்கை அன்னையின் அருளை வேண்டுவதாக பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு கரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

m.k.stalin and mdmk chief vaiko have wished CM Jayalalitha

இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த கவலை ஏற்பட்டது. முதலமைச்சர் அவர்கள் முழுமையான உடல்நலம் பெற இயற்கை அன்னையின் அருளை வேண்டுகிறேன் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamil Nadu opposition leader m.k.stalin and mdmk chief vaiko have wished CM Jayalalitha to recover fast from the illness
Please Wait while comments are loading...

Videos