For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலில் கலப்படம் இல்லையாம்... அப்ப தூக்கில் தொங்குவாரா அமைச்சர்???

பாலில் கலப்படம் இல்லை என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னபடி செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பாலில் கலப்படம் இல்லை என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் சொன்னபடி செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

அண்மையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் ராஜேந்திர பாலாஜி. தனியார் பால் நிறுவனங்களை வளைத்து வளைத்து குற்றம்சாட்டிய அவர் தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும் குண்டை தூக்கிப்போட்டார்.

தனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறிய அவர், இதனால் தனியார் பால் பாக்கெட்டுகள் 10 நாட்கள் வரை கெடாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

தூக்கில் தொங்குவேன்

தூக்கில் தொங்குவேன்

தனியார் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். கமிஷனுக்காக பால் முகவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் பாலில் நடைபெறும் கலப்படம் குறித்து ஆய்வு செய்ய புனேவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். தனது குற்றச்சாட்டுகள் பொய்யானால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், தூக்கில் தொங்குவேன் என்றும் கூறினார்.

பாலில் கலப்படம் இல்லை

பாலில் கலப்படம் இல்லை

இதனால் தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் அதிர்ந்து போயினர். அமைச்சரின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தரப்பரிசோதனை முகாமில் 62 பால் மாதிரிகளை உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வு செய்தது. அதில் எந்த ஒரு பால் மாதிரியிலும் தரம் குறைவு மற்றும் கலப்படம் இல்லை என தெரியவந்துள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

துளைக்கப்படும் அமைச்சர்

துளைக்கப்படும் அமைச்சர்

இந்நிலையில் அமைச்சர் சொன்னததை செய்வாரா? என கேள்வி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக வலைதளத்திலும் நெட்டிசன்கள் அமைச்சரை துளைத்து வருகின்றனர்.

நேரலையில் எப்போது போடப்போறீங்க?

அப்போ அமைச்சர் தூக்கில் தொங்குவதை நேரலையில் எப்போது போடப்போறீங்க? எனக்கேட்கிறார் இந்த நெட்டிசன்

ராஜினாமா செய்ய வேண்டும்

இதற்கு அமைச்சர் பதில் சொல்வாரா? தவறான தகவல் கொடுத்த அமைச்சர் பதவி விலக வேண்டும். என்கிறார் இந்த வலைஞர்..

English summary
The Food Safety Department has stated that no milk is mixed or substandard. After this reveal netizens teasing Minister Rajendira balaji.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X