இரட்டை இலைச்சின்னம் விவகாரம்: ஓபிஎஸ்க்கு ஆதரவாக 6000 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம்

இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் அணி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் அணி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக 6000 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 43 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி தெரிவித்துள்ளது.

சசிகலாவின் அதிகார வெறியால் அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து ஓபிஎஸ் தரப்பு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவின் நியமனம் செல்லாது எனக்கூறி தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎ தரப்பு எம்பிக்கள் புகார் அளித்தனர்.

மேலும் உண்மையான அதிமுக தாங்கள் தான் என கூறிய ஓபிஎஸ் தரப்பு இரட்டை இலை சின்னத்தை தங்களிடமே வழங்க வேண்டு என கோரிக்கை விடுத்தது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வந்தது.

நாளை மறுநாள் ரிசல்ட்

இதேபோல் சசிகலா தரப்பு அதிமுகவினரும் இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக இருதரப்பினரும் நாளை மறுநாள் காலை தேர்தல் ஆணையத்தில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

43 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவு

இந்நிலையில் இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் அணி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 43 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி தெரிவித்துள்ளது.

6000 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல்

மேலும் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக 6000 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

60 லட்சம் பேர் தயார்

மேலும் 60 லட்சம் பேர் உறுதிப்பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பின் பிரமாண பத்திரங்களையும் ஆய்வு செய்ய வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீதியில் சசிகலா தரப்பு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக சட்ட விதிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ் அணிக்கே அதிகம் உள்ளதால் சசிகலா தரப்பு அதிமுகவினர் பீதியடைந்துள்ளனர்.

English summary
OPS team filed more additional documents today in the Election commission. 6000 ADMK leaders filed affidavit to support OPS in the Election Commissio.
Please Wait while comments are loading...