அப்பாவுக்கு மகன் தப்பாம.. 10 வயதிலேயே கார் ரேஸில் இறங்கிய ஆத்விக்.. பயிற்சி கொடுத்த அஜித் குமார்
சென்னை: சென்னையில் உள்ள மெட்ராஸ் கார்டிங் ரேஸிங் தளத்தில் தனது ஆத்விக்கிற்கு நடிகரும், ரேஸருமான அஜித் குமார் பயிற்சி அளித்த வீடியோ ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், தந்தையை போல் மகன் என்று பாராட்டி வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார் நீண்ட ஆண்டுகளாக கார் ரேஸிங்கில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸிங்கில் இருந்து விலகி இருந்த அவர், தற்போது மீண்டும் கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். விடாமுயற்சி மற்றும் குல் பேட் அக்லி ஆகிய இரு படங்களிலும் நடித்து முடித்த அவர், முழுமையாக கார் ரேஸிற்கு ஏற்ப உடலை குறைத்து இளமையாக தோற்றம் அளித்தார்.

இதன்பின் துபாய் 24H கார் ரேஸிங்கில் பங்கேற்ற அஜித் குமார் ரேஸிங் அணி, 3வது இடத்தை பிடித்து அசத்தியது. துபாயில் அஜித் குமாரை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால், வர்ணனையாளர்களே மிரண்டு போயினர். அதேபோல் ரேஸிங் தொடர்பாக அஜித் குமார் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்திலும் அஜித் குமார் ரேஸிங் அணி 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக தனது ரேஸிங் பணிகளை முடித்துவிட்டு அஜித் குமார் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு, தனது மகனுடன் ஜாலியாக கார் ரேஸிங் செய்து நேரத்தை செலவிட்டுள்ளார்.
அதேபோல் தன்னை போல் ரேஸிங் செய்வதற்கு மகன் ஆத்விக்கிற்கும் பயிற்சி அளித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் குமார் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற பிரேசில் லெஜண்ட்ஸ் - இந்தியா ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஆத்விக் மற்றும் ஷாலினி நேரில் கண்டனர்.
அப்போது ரொனால்டினோவுக்கு அருகில் சென்று ஆத்விக் பேச முயற்சித்தது ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. தற்போது தந்தையை போல் ஆத்விக் ரேஸிங்கில் களமிறங்கி இருக்கிறார். 10 வயதாகும் அவருக்கு, மெட்ராஸ் கார்டிங் ரேஸிங் தளத்தில் அஜித் குமார் பயிற்சி அளித்துள்ளார். 10 வயதிலேயே அஜித் குமார் தனது மகனுக்கு பயிற்சியை தொடங்கி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications