அதிக லாபம் தரும் புதிய வீரியரக நெல்விதை

புதிய வீரிய ரக நெல்
தமிழகத்தில் நெல் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் புதிய வீரிய நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 2006ஆம் ஆண்டு கோ.ஆர்.ஹெச்.,3 என்ற குறுகிய காலவீரிய ஒட்டு ரகம் வெளியிட்டது. இதன் விதைகளை அதிகரிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள 5 ஹெக்டேர் பரப்பளவிலான வயல்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கோ.ஆர்.ஹெச்.,3 பயிரிடப்பட்டது. இதில் வரதாம்பாளையத்தில் வசிக்கும் விவசாயி பழனிச்சாமி என்பவரது நிலத்தில் மட்டும் 1400 கிலோ வீரிய ரக பெண் நெல்விதையும் 3000 கிலோ ஆண் நெல் விதையும் விளைச்சல் கிடைத்துள்ளது. இவற்றை பயிரிட மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்த பழனிச்சாமி லாபமாக 1, 48, 000 ரூபாயை பெற்றுள்ளார்.
செயற்கை மகரந்த சேர்க்கை
இந்த புதிய முறையிலான விவசாய முறை குறித்து வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். அதன்படி இரண்டு ஆண் நெற்பயிர் வரிசைக்கு இடையில் ஒரு பெண் நாற்று வரிசை நடவு செய்யப்பட்டது. நடவு செய்த 65 நாட்களுக்கு பிறகு நெற்பயிர் கதிர் பூவிட்ட சமயத்தில் ஆண், பெண் பயிர்களை செயற்கையான முறையில் மகரந்த சேர்க்கை செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து 110 நாளில் நெல் அறுவடை செய்யப்பட்டது. பழனிச்சாமியின் நிலத்தில் முதலில் ஆண் நெல் மட்டும் அறுவடை செய்யப்பட்டது. அடுத்த நாள் பெண் நெல் அறுவடை செய்யப்பட்டது. பெண் நெல் 1400 கிலோவும், ஆண் நெல் 3000 கிலோவும் கிடைத்தது. ஒரு கிலோ பெண் நெல் 110 ரூபாய் வீதம் கோவை வேளாண் பல்கலை எடுத்து கொண்டது. ஆண் நெல் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடைக்கு முன்பாக நிலத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது.
நோய் தாங்கும் நெல் விதைகள்
கே.ஆர்.ஹெச்.,3 ரக வீரிய ஒட்டு ரக நெல், உயர் விளைச்சல் ரகங்களை விட 24 சதவீதம் அதிக மகசூல் கொடுக்ககூடியது. குலை நோய், துங்ரோ வைரஸ் நோய்களை தாங்கி வளரும் தன்மை கொண்டது. பச்சை தத்துப் பூச்சி, வெண்முதுகு தத்துப்பூச்சி, புகையானையன் நோய் தாங்கும் சக்தி கொண்டது. மேலும், கே.ஆர்.ஹெச்.,3 வீரிய ஒட்டு ரக நெல் சமையலுக்கு மிகவும் உகந்தது என்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோ.ஆர்.ஹெச்.,1 வீரிய ஒட்டு ரகம் 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏ.டி.டி.ஆர்.ஹெச்.,1 என்ற குறுகிய கால வீரிய ஒட்டு ரகம், கோ.ஆர்.ஹெச்.,2 என்ற மத்திய கால வீரிய ஒட்டு ரகம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட கோ.ஆர்.ஹெச்.,3 ரக விதை நெல் பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications