பொது இடங்களில் 'அந்த மாதிரி' படங்களை பார்க்க தடை கோரிய மனு.. தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில், பொது இடங்களில் ஆபாச படங்களை பார்க்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சமூக ஆர்வலர் பி.எஸ். ஜெயின் என்பவர்தான் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்தியாவை பொறுத்தவரை இன்டெர்நெட் மூலமாக ஆபாச படங்கள் எளிதாக கிடைப்பதாகவும் இதன் மூலம் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கிறது என்றும், சிறார்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Supreme Court

குறிப்பாக பொது இடங்களில் ஆபாச படங்களை பார்ப்பதை தடுக்க வேண்டும். இதை தடுக்க தேசிய அளவில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "மத்திய அரசு, ஆபாசப்படங்கள் குறித்து சட்டங்களை வகுத்திருக்கிறது. ஆபாசப்படங்களை ஷேர் செய்வதை குற்றமாக சட்டம் சொல்கிறது. ஆனால், அந்த படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதவில்லை. இந்த கேப்பை பயன்படுத்தினார் சிறார்கள் எளிதில் இந்த படங்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்" என்று வாதங்களை முன் வைத்திருந்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது, "மனுதாரர் எழுப்பியிருக்கும் இந்த விவகாரம், மிகவும் பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை. இது சட்டரீதியான கேள்வி என்பதை விட.. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கொள்கை சார்ந்தது. எனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது.

ஆனால், இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அல்லது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவெடுக்க முடியும். இது அவர்களின் வரம்புக்கு உட்பட்டது. எனவே மனுதாரர் தன்னுடைய கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் வழங்கலாம். அந்த மனுவில் உள்ள ஆலோசனைகளை மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+