ஓசி மின்சாரம் ரத்து: விவசாயிகள் கண்டனம்
கோவை;
பிரதமர் வாஜ்பாய் அறிவித்த விவசாயத்திற்கு மின்சாரக் கட்டணம், விவசாயத்தையே அழித்து விடும்அபாயமிக்கது என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர் சிவசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
விவசாய மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு யூனிட்டிற்கும் 50 பைசா வீதம் நிர்ணயிக்கவேண்டும் எனப் பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளிப்பதால் 44 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக வாஜ்பாய் கூறியுள்ளார்.ஆனால், இந்த அரசு காட் ஒப்பந்தத்தின் மூலம் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.இதனால் 50 கோடி விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னை மரங்களில் ஈரியோபைடு நோய் தாக்குதலால், தென்னையே முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது.விவசாயிகளுக்கு கொப்பரைத் தேங்காய் மானியம் உரிய விதத்தில் கிடைக்கவில்லை. எனவே தேங்காயைநேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
தேர்தல் வரவிருப்பதால் வேண்டுமானால், இலவச மின்சாரம் ரத்து செய்யாமல் இருக்கலாம். ஆனால், தேர்தல்முடிந்தவுடன் இது ரத்து செய்யப்பட்டு விடும். எனவே இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயம் முற்றிலும்பாதிக்கப்பட்டு அழியும் அபாயம் ஏற்படும்.
தமிழக அரசே தற்போது சில விவசாயிகளிடம் அதிக அளவு டெபாசிட் மற்றும் மின் கட்டணத்தை வசூல் செய்துவருகிறது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், டெபாசிட் தொகையை அந்தந்தவிவசாயிகளுக்குத் திருப்பித் தர வேண்டும். புதிய இணைப்புகளுக்கு கட்டணம் மேற்கொண்டு கட்டணம்வசூலிக்கக் கூடாது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications