விவசாயக் கொள்கை உருவாக்க பா.ஜ.க திட்டம்
கோவை:
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி முதல் முறையாக விவசாயக் கொள்கையை உருவாக்கவுள்ளது என கோவையில் பாரதிய ஜனதாக்கட்சியின் மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா தெரிவித்தார்.
சுவதேசி பேர் இன்.ஆர்க் என்ற வெப்சைட்டைத் துவக்கி வைக்க கோவை வந்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரானகோவிந்தாச்சாரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியாவது.
கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறேன். இந்த ஆய்வின் இறுதிஅறிக்கையை பாரதிய ஜனதாக் கட்சியிடம் சமர்ப்பிக்கவுள்ளேன்.
சென்னை, கல்கத்தா, பிகார், மாகாராஷ்டிரா உட்பட பல்வேறு இடங்களில் இந்த ஆய்வுகளை நடத்தியுள்ளேன். இந்த ஆய்வுகளினால் பல்வேறு புரியாதவிஷயங்கள், விளங்காத விஷயங்கள் குறித்து ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிய வந்துள்ளது. உலக நாடுகள் எல்லாம் தனி மனிதனின் ஆண்டு உணவுஉட்கொள்ளும் அளவு 300 கிலோவிற்கு மேல் இருந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், நமது நாட்டில் இது200 கிலோ விற்கு கீழ் என்ற அளவே பயன்படுத்தப்படுகிறது.
நாட்டின் விவசாய உற்பத்தி திறன் 280 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்து வருகிறது. ஆனால் நம்மிடம் சேமித்து வைக்கும் திறன் 30 மில்லியன் மெட்ரிக்டன்னாக உள்ளது.
நாடு சுதந்திரமடைந்து இது நாள் வரை இயற்கை வளங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். குறிப்பாக நிலவளம், நீர்வளம், வன வளம்ஆகியவற்றில் நாம் எந்த அக்கறையும் செலுத்த வில்லை.
அதோடு நமது நாட்டில் சமூக ரீதியாக ஊழல், சந்தைப் பொருளாதார வீழ்ச்சி, கிராமப் புற ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை ஆகியவை உட்பட பல்வேறுவிஷயங்கள் அதிகரித்து வந்துள்ளது.
எனவே, தற்போது பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி முதல் முறையாக விவாவதம் நடத்தி விவசாயக் கொள்கையைஉருவாக்கவுள்ளது. சிறு தொழில் வளர்ச்சிக்காக தனியாக ஒரு வாரியத்தை துவக்கி அதனால் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதோடு சர்வதேச அளவில் நமது வலிமையை பொக்ரான் குண்டு வெடிப்பினால் வெளிப்படுத்தியுள்ளோம். தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உலக நாடுகளில்முன்னணியில் உள்ளோம்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் தான் வழி வகுத்தது. இதனால் நமது பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.இது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தையைத்தான் அரசு நடத்த முடியுமே ஒழிய வேறு வழியில்லை. வேண்டுமானால் மீண்டும் ஒரு வருடத்திற்கு ஒத்திப் போடமுடியும்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக் காரணமாக இருந்து விட்ட காங்கிரஸ் கட்சி, எந்த விஷயம் கிடைக்கவில்லை என்றால், அந்தப் பிரச்னையை கையில்எடுத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் தெளிவாகத் தெரிவித்துள்ளபடி அயோத்தி பிரச்னையில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குட்பட்டு தான் அங்கு கோயில் கட்டுவதுகுறித்து முடிவு எடுக்க முடியும். அங்கு ராமர் பிறந்தாரா இல்லையா என்பது பற்றி நீதிமன்றத்தால் கூட கூற இயலாது. ஆனால், ராமர் பிறந்தஇடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பதில் மக்கள் உணர்வுப் பூர்வமாக இருந்தால் அதை நீதிமன்றத் தீர்ப்பால் கூட கட்டுப்படுத்த முடியாது என்றார்கோவிந்தாச்சாரியா தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications