பற்றாக்குறை போக்க விவசாயத்துக்கு முன்னுரிமை: தா.பாண்டியன் வலியுறுத்தல்
ஓசூர்: தொழில்துறைக்கு முக்கியத்துவம் தருவதைப் போல விவசாயத்துக்கு முன்னுரிமை தந்தால் உணவுப்பொருள் பற்றாக்குறை நீங்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
அகில இந்திய விவசாயிகள் சங்க வைரவிழா மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 24வது மாநில மாநாடு ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:
விவசாயம் முழுமையாக இயற்கையை சார்ந்துள்ளது. ஆனால், தொழில் துறைக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இதனால், உணவு உற்பத்தி அடியோடு குறைந்து விட்டது.
நில உச்சவரம்பு சட்டம், தரிசு நில அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட விவசாய சட்டங்கள் சாகடிக்கப்பட்டு, அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன.
கல்வி நிறுவனங்கள் அமைக்க 450 ஏக்கர் முதல் 4,000 ஆயிரம் ஏக்கர் வரை விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. நில உச்ச வரம்பு சட்டம் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை.
ஆடு, மாடுகளை விவசாயிகள் பகுதி நேர தொழிலாக வளர்க்கின்றனர். அவற்றுக்காக புல் வளர்ப்பதற்கு கூட காலி இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனனால், கால்நடைகள் கூட அழியும் அபாயத்தில் உள்ளன.
நாட்டின் மொத்த ஆண்டு வருமானத்தில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் வெறும் 4 சதவீதமாக உள்ளது. ஆனால், தொழில்துறை மூலம் 74 சதவீதம் வருமானமும், மக்கள் கட்டும் சேவை வரிகள் மூலம் 22 சதவீதம் வருமானமும் கிடைக்கிறது.
தொழிற்துறையில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு உற்பத்தி விலை அதிகமாக உள்ளது. ஆனால், இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.
தொழிற்துறைக்கு கொடுக்கும் முன்னுரிமையை போல், கொஞ்சம் விவசாயத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் கொடுத்தால், உணவு உற்பத்தி பற்றாக்குறையை தவிர்க்க வாய்ப்புள்ளது' என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications