கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கடக ராசிக்கு ஆடி மாதத்தில் காத்திருக்கும் ஆபத்து

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்களை விரிவாக காணலாம்.

ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் கடக ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

aadi-month-zodiac-sign-kadagam-rasi-people-will-get-good-fortuneds-and-luck-in-this-month

கடகம்

கடக ராசி மற்றும் லக்னத்தினர் உத்தியோகத்தில் கோபப்படாமல் இருப்பது நன்மை பயக்கும். படிப்பு, தொழில், வியாபாரம் சம்பந்தப்பட்ட பயணங்கள் வந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படாமல் இருப்பது நன்மையைத் தரும். தேவையில்லாத சிக்கல், வம்புகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. தொழில் சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.

பிரச்சனை

ஆவணங்களில் கையெழுத்து போடுவதற்கு முன்பு படித்துப் பார்த்துவிட்டு போடுவது நல்லது. தேவையில்லாத நட்புகளால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. லீகல் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மூன்றாவது நபர்களால் குடும்பத்தில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் கணவன், மனைவி என யாராக நீங்கள் இருந்தாலும் இணக்கமாகச் செல்வது நன்மையைத் தரும்.

தைரியம்

குடும்ப சண்டை வந்தால் கேஸ், கோர்ட் என செல்லும் நிலைமை ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். சுபகாரியத்தில் உள்ள தடைகள் நிவர்த்தியாகும். தைரியம் அதிகரிக்கும். கட்டுக்கோப்பாக இருப்பது அவசியம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்

தாய், தந்தை, ரத்தபந்த உறவுகளின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. விநாயகரின் காரியசித்தி மாலை, அனுமன் சாலிஷா, கோளார் பதிகம் கேட்பது உங்களுக்கு வலிமையை ஏற்படுத்தும். மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழிபாடு

எல்லா விஷயத்தையும் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பெற்றோர் குழந்தைகளை அரவணைத்துக் கொள்வது நல்லது. நரம்பு, தலைவலி, பதட்டம், கோபம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். அனுமன் வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+