நவீன இந்தியாவை உருவாக்கிய 3 மேதைகள்
டெல்லி:
இந்தியாவை நவீன இந்தியாவாக மாற்றிய மேதைகள் கவிஞர் கபிர், மகாத்மாக காந்தி மற்றும் விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியேர் தான் எனபிரான்ஸ் நாட்டு தத்துவத்துறை பேராசிரியர் கை ஸோர்மென் தெரிவித்துள்ளார்.
ஜீனியஸ் ஆப் இந்தியா என்ற தனது புத்தகத்தை வெளியிட்டு விட்டு பேராசிரியர் ஸோர்மென் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவை நவீன இந்தியாவாக உருவாக்கிய பெருமை மகாத்மாக காந்தி, சுவாமிநாதன் மற்றும் கபிர் ஆகியோரைச் சேரும். அவர்களது சிந்தனை,செயல்பாடுகள் எல்லாம் காலம்கடந்து நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் நான் இந்தியா வந்திருந்தேன். அப்போது இந்தியாவைக் குறித்து எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்போதுகாந்தியைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தும் நான் அவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை.
கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கும், தொழில்நுட்பத் துறையைமேம்படுத்துவதற்கும் காந்தி ஒருபோதும் எதிர்ப்புக் கூறியதில்லை.
இப்போதுதான் விஞ்ஞானிகள், நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பததுடன் கூடிய மனிதாபிமாமும் தேவை என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
பேராசிரியர் சுக்தேவ் சிங்கின் ஆங்கிலக் கவிதையை மிக அழகாக மொழி பெயர்த்திருக்கிறார் கபிர். அதாவது தனது தமிழ் மொழி பெயர்ப்பில், அரசியலில்மதங்கள் ஏற்படுத்தும் பிரச்சனை குறித்து மிக அழகாக எழுதியுள்ளார்.
இவர் கூறியது போல் இந்தியாவும், ஐரோப்பிய நாடுகளும் மிக அதிக அளவு மத ரீதியான அரசியலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுநிஜம்.
அடுத்ததாக, வேளாண் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர் டாக்டர்.சுவாமிநாதன்.
குறிப்பாக இந்தியாவில் தமிழக கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, வேளாண்மைத் தொழிலில் எப்படி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுஎன்பதை புரிய வைத்தவர் சுவாமிநாதன். இதனால் இந்த மூன்று பேரும் இந்தியா நவீன இந்தியாவாக உருமாற வழிவகுத்த மேதைகள் என்றேகூறலாம்.
மேலும் இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையும் என்னை மிகவும் கவர்ந்தவை.
முதலில் எனக்கு இந்தியாவைக் குறித்து புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் மலையாள எழுத்தாளர் முகுந்தன் மற்றும் வங்காளகவிஞர் சின்மோயா குஹா என்பவர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்தியாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டேன்.
நான் எழுதியுள்ள இந்த புத்தகம் ஸ்பெயின் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றார் ஸோர்மென்.
யு.என்.ஐ.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications