ஹேப்பி நியூஸ் பெற்றோர்களுக்கு! இந்தியாவில் X தளத்தில் அந்த வீடியோக்களுக்கு தடை.. எலான் மஸ்க் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் உள்ள எக்ஸ் கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான செய்திகள் இணையதளம் முழுவதும் பரவி வருகின்றன.. இதற்கு என்ன காரணம்? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

இன்று செல்போன் என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் இல்லாமல், உலகத்தையே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.. இதில் சோஷியல் மீடியாவின் பங்கு மிக முக்கியமானது..

Elon Musk

குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற "X" (முன்பு ட்விட்டர்) தளம், அரசியல் முதல் சினிமா வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் வழங்கும் ஒரு தளமாக இருந்து வருகிறது.. ஆனால், கடந்த சில காலங்களாக இந்தத் தளம் ஒரு தவறான பாதைக்குச் செல்வதாகப் புகார்கள் எழுந்தன.. இதற்கு முக்கிய காரணம், அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கொண்டு வந்த சில தளர்வுகள் தான்..

X தளம் வீடியோ

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் "X" தளத்தை கைப்பற்றிய எலான் மஸ்க், அதில் பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களுக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை.. இதனால், ஆபாச வீடியோக்கள் மற்றும் நிர்வாணப் புகைப்படங்கள் 'சென்சிட்டிவ்' என்ற பெயரில் தடையின்றி உலாவத் தொடங்கின..

இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எளிதில் இந்த வீடியோக்களைப் பார்க்கும் சூழல் உருவானது.. இது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது..

நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை ஆபாச இணையதளங்களுக்கு ஏற்கனவே கடும் தடைகள் உள்ளன.. எலான் மஸ்க்கின் இந்தத் தளர்வு, இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களுக்கு சவால் விடுவது போல அமைந்தது.. மேலும், சமீபகாலமாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரிக்கும் "டீப் ஃபேக்" வீடியோக்கள் இந்தத் தளத்தில் காட்டுத்தீ போலப் பரவின..

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த இந்திய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தது..

எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இதனை தொடர்ந்து, மத்திய அரசு எலான் மஸ்க்கின் "X" நிறுவனத்திற்கு ஒரு மிகக் கடுமையான எச்சரிக்கை நோட்டீஸை அனுப்பியது.. அதில், "இந்திய மண்ணில் தொழில் செய்ய வேண்டுமானால், இந்தியச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.. ஆபாசமான மற்றும் சட்டவிரோதமான வீடியோக்களை உங்கள் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.. இல்லை என்றால், இந்தியாவில் "X"தளத்தின் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கிடுக்குப்பிடி போட்டது..

இந்தியாவின் இந்த அதிரடி எச்சரிக்கைக்கு எலான் மஸ்க் தற்போது பணிந்துள்ளார்.. உலகிலேயே மிகப்பெரிய சந்தையான இந்தியாவை இழக்க விரும்பாத மஸ்க், இந்தியப் பயனாளர்களுக்குத் தெரியாத வகையில் தனது தளத்தில் உள்ள ஆபாச வீடியோக்களை முழுமையாக நீக்கத் தொடங்கியுள்ளார்.. தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு "X"கணக்கிலும் ஆபாசப் பதிவுகளைப் பார்க்க முடியாதபடி தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. பழைய ஆபாசப் பதிவுகள் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி அழிக்கப்பட்டு வருகின்றன..

ஆபாச வீடியோக்கள்

இதுமட்டுமின்றி, இனி யாராவது ஆபாச வீடியோக்களைப் பதிவிட்டால், அவர்களுக்கு எந்த ஒரு வார்னிங்கும் தரப்படாது.. அவர்களது அக்கவுண்ட்கள் உடனடியாகவும், நிரந்தரமாகவும் முடக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் ஒரு தளத்தில் இத்தகைய ஆபாசங்களுக்கு இடம் இல்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது..

இந்திய அரசின் இந்தத் துரித நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.. நம்முடைய நாட்டின் கலாச்சாரம் மற்றும் இளைய தலைமுறையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, இணைய உலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+