தமிழகத்தில் இன்று
மருத்துவச் செடிகளை சரியாகப் பயன்படுத்த அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
இயற்கையில் கிடைக்கும் செடிகளின் மருத்துவக் குணங்களை ஆராய்ந்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோவையில் நடந்த கருத்தரங்கில்தமிழ்நிாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கண்ணையன் கூறினார்.
கோவையில் கே.ஜி மருத்துவமனை சார்பில் கேஸ்ட்ரோகான் 2000 என்ற கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
குடல்நோய் தொடர்பான இக்கருத்தரங்கில் இந்திய அளவிலிருந்து பல்வேறு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கைத் துவக்கி வைத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கண்ணையன் பேசியதாவது:
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு வகிப்பது உணவு, கல்வி, சுகாதாரம் தான். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம்ஏற்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் நவீனத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்தாலும், இயற்கையில் கிடைக்கும் வளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இயற்கையாக வளரும் செடிகளின் மருத்துவக் குணங்களை ஆராய்ந்து அவற்றை மருத்துவத்தில் சேர்க்க வேண்டும்.
உணவு உற்பத்தியைப் பெருக்க தற்போது ரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதே போன்றுபூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மிகவும் வீரியமிக்க மருந்துகளை விவசாயிகள் உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் காற்று, நீர்,நிலம் அனைத்தும் மாசுபடும் சூழ்நலை உருவாகியுள்ளது. இதனால் உடல்நிலம் வெகுவாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பாரதிய வித்யாபவன் சேர்மன் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசும்போது, ஆன்மீகத்திற்கும், மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி பேசினார்.
விழாவில் கே.ஜி மருத்துவமனைச் சேர்மன் டாக்டர் பக்தவத்சலம், குடல் நோய் பிரிவுத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications