பள்ளிகளில் வேளாண்மைப் பாடம் வருமா?
ஈரோடு:
பள்ளிகளில் வேளாண்மை ஒரு பாடமாக அறிணிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுணிகம் பேசினார்.
ஈரோட்டில் விவசாயப் பொருட்கள் கண்காட்சியை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுணிகம் துவக்கி வைத்து பேசியதாவது:
உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டியுள்ளது. நமது உணவுத் தேவைக்கும் மேல் உணவு உற்பத்தி உள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு 196 மில்லியின் டன்கள் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது தேவையோ 186 மில்லியின் டன்கள் தான். இது தவிர அரசிடம் 40 மில்லியன் டன் உணவு கையிருப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு உணவு உற்பத்தி 97.32 லட்சம் மெட்ரிக் டன்னாகும். இதில் அரிசி மட்டும் 81.92 லட்சம் மெட்ரிக் டன்னாகும்.
எனவே தமிழகம் வெளிநாட்டிலோ வெளிமாநிலங்களிலோ கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில், 35 லட்சம் ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது.
இந்த நிலங்களை விலை நிலங்களாக மற்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில், 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications