கரும்பிலிருந்து எரிபொருள் தயாரிக்க கோரிக்கை
கோவை:
பெட்ரோலுக்குப் பதிலாக கரும்பிலிருந்து தயாராகும் கேஸோஹால் என்ற எரிபொருளைத் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கரும்புவிவசாயிகள் புதிய பிரச்னையைக் கிளப்பியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெட்ரோலுக்குப் பதிலாக கேஸோஹால் என்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியும். இந்த கேஸோஹால், கரும்பு விவசாயிகளுக்கு லாபம் ஈட்டக்கூடியதாக அமையும்.
இத்தகைய எரிபொருளை கரும்பு கழிவுப் பொருட்களில் இருந்து எளிதாகப் பெற முடியும். பிரேசில் நாட்டில் 40 சதவீதம் கேஸோஹால் தான்பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பெருமளவு அந்நியச் செலாவணி அரசுக்கு மிச்சமாகிறது. இதே போன்று இந்தியாவிலும் கேஸோஹால்பயன்படுத்த அரசு அனுமதிக்கவேண்டும். கேஸோஹால் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
சர்க்கரை உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடைந்து விட்டது. தேவைக்கு மேலாகவே உற்பத்தி செய்து வருகிறோம். இந்தியாவின் ஆண்டு தேவை145 லட்சம் டன் சர்க்கரை தான். ஆனால் இப்போது உற்பத்தியாவது 185 லட்சம் டன்னாக உள்ளது.
மத்திய அரசு கடைபிடித்து வரும் தவறான கொள்கையால், இப்போது சர்க்கரை இறக்குமதி செய்யப்படுகிறது. இது தேவையற்றது. மேலும்,விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை இந்த இறக்குமதி ஏற்படுத்தி வருகிறது என கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications