அருணை வைத்துக்கொண்டு ஆக்சன் எடுக்க முடியாது! விஜய்யிடம் சொன்ன அதிகாரிகள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் டிஜிபி அருண் ஐ.பி.எஸ்.சின் அதிரடி இடமாற்றம் தான் தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையில் நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே அவரை அங்கிருந்து மாற்றி, டம்மி போஸ்டிங் என சொல்லப்படுகிற ஊனமாஞ்சேரி பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டது தான் இந்த விவாதங்களுக்கு அடிப்படை!

அருணின் இடமாற்றம் குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இவர் நியமிக்கப்பட்ட போதே, எப்படி இது என்கிற கேள்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்திருந்தது. ஏனெனில், கடந்த திமுக ஆட்சியில் சென்னை காவல்துறை ஆணையராக கோலோச்சிய அருண், திமுக தலைமைக்கும் அதன் பவர் சென்டர்களுக்கும் மிக மிக நெருக்கம்.

CM Vijay

இவர் செய்த பல தவறுகள் மூடி மறைக்கப்பட்டன ; வெளியே தெரிந்த பல தவறுகள் மீது திமுக ஆட்சியில் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. அந்தளவுக்கு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார். திமுக தான் இவர்; இவர் தான் திமுக என்கிற கமெண்டுகள் அந்த காலக்கட்டத்தில் அதிகாரிகளிடம் மிக பிரசித்திப்பெற்றவை.

அப்படிப்பட்ட திமுகவுக்கு மிக நெருக்கமான ஒருவரை, திமுகவின் ஊழல்களுக்கு காரணமான மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமிக்க, மிக மிக முக்கியத் துறையான லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமித்ததுதான் பலருக்கும் சந்தேகம். அதனால் தான் எப்படி இது ? என்கிற கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டது.

திமுக ஆட்சியில் மாநில உளவுத்துறையின் உச்ச அதிகாரியாக இருந்த ஒருவர், ஸ்டாலினிடம் ஆட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துத் திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஆகிய இருவரின் நட்பு வளையத்தில் இருந்தவர் அருண். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, தற்போதைய தவெக அரசின் பவர் சென்டரிடம் நெருக்கமாகி விட்டார். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, விஜய்யிடம் யார் ஆளுமை மிக்கவராக இருக்கிறார்கள் என அறிந்து அப்போதே அவர்களிடம் நெருங்கி விட்டார் ஐ.ஏ.எஸ். அதிகாரி.

விஜய்யின் முக்கிய பவர் சென்டர்களிடம் இந்த ஐஏஎஸ்சின் சொல்லுக்கு மரியாதை இருக்கிறது. இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் உளவுத்துறையில் உச்ச அதிகாரியாக இருந்தவரும் இணைந்தே லஞ்ச ஒழிப்புத்துறைக்குள் அருணை கொண்டு வந்தனர். இதற்கு விஜய்யின் பவர் சென்டர்கள் உடந்தை !

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக அருண் நியமிக்கப்படும் போது, அதனை உள்துறை செயலாளர் மணிவாசன் விரும்பவில்லை. எதிர்க்கவும் செய்திருக்கிறார். ஆனால், முதல்வர் விஜய்யிடம் பவர் செண்டர்கள் கொடுத்த அழுத்தம், மணிவாசனின் எதிர்ப்புகள் அடங்கிவிட்டன. லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநரானார் அருண்'' என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அருண் கொண்டுவரப்பட்ட பின்னணிகளை விவரித்தனர்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அதிகாரிகள், ''திமுக மாஜிக்களுக்கு எதிராக அனைத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கிறேன் என அருண் உறுதியளித்திருக்கிறார். ஆனால், திமுக மாஜிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், திமுக தலைமைக்கு எதிராக விவாதிக்கப்படும் விசயங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து திமுக தரப்புக்கு லீக் செய்யப்படுகிறது. இதில் அருணின் பங்களிப்பு தான் அதிகம் இருக்கிறது என கடந்த 2 வாரங்களாகவே உள்துறை செயலாளர் மணிவாசன், முதல்வர் விஜய்க்கு தகவல் தெரிவித்தபடி இருக்கிறார்.

குறிப்பாக, சில பல காரணங்களுக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார் திமுக மாஜி அமைச்சர் எ.வ.வேலு. அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை, ரெய்டையும் நடத்தியது. சிங்கப்பூர் சென்ற வேலு, ஒரு நாளுக்கு முன்னதாகவே சென்னை திரும்புவதாக இருந்தது. ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதால், அவர் சென்னை திரும்பும் போது கைது செய்ய சீக்ரெட்டாக முடிவு செய்திருந்தனர். இந்த விசயம் வேலுவுக்கு சொல்லப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், சென்னைக்கு வரும் போது, சிகிச்சை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள் ; அதை வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசுங்கள். சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் ஓடி ஒளிய மாட்டேன். குறிப்பிட்ட தினத்தில் ஆஜராவேன் என காட்டமாக பேசுங்கள். சம்மனில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்னதாகவே சென்னைக்கு வந்து விடுங்கள். சம்மன் இருக்கும் போது, உங்களை கைது செய்ய முடியாது என்கிற யோசனையையும் வேலுவுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதன்படியே சென்னை ஏர்போர்ட்டில் நடந்து கொண்டார் வேலு.

சென்னை ஏர்போர்ட்டில் அவரை கைது செய்யாமல் போனதற்கு காரணம் இதுதான். கைது செய்யப்படுவார் என்பதாக முதல்வர் விஜய்யிடம் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த சூழலில், அந்த ஆக்‌ஷன் எதுவும் இல்லாததால், அதைப் பற்றி விஜய் விசாரிக்க, மேற்கண்ட விபரங்களை விளக்கியிருக்கிறார் மணி வாசன். சுருக்கமாக சொல்வதானால், அருணை வைத்துக் கொண்டு திமுகவுக்கு எதிரான எந்த ஊழல் நடவடிக்கையையும் எடுக்க முடியாது.

அவரை வைத்துக்கொண்டு மாஜி வேலுவிடம் விசாரிக்கவும் முடியாது. இவரது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். மேலும், என்ன மாதிரி கேள்விகள் கேட்கப்பட இருக்கிறது , அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் போன்ற பல தகவல்களும் வேலுவுக்கு தெரியப்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தெளிவாக விவரித்திருக்கிறார். டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் இதே ரீதி யிலேயே அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இப்படி உள்துறை செயலர் மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் ஆகியோர் கொடுத்த தகவல்கள் தான், உடனடியாக அருண் மாற்றப்பட்டதன் பின்னணி '' என்று விரிவாக கூறுகின்றன ஐ.பி.எஸ். வட்டாரங்கள்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+