அதிக மின்சாரம் பயன்படுத்தினால் 50% கூடுதல் கட்டணம்
சென்னை: வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக மின்வாரியம் கொண்டு வருகிறது.
இதன்படி 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அதை 20 சதவீதம் அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவோரிடம் 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடு நவம்பர் 1ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வீட்டு இணைப்புகளில் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் 20 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.
அதாவது, ஒரு வீட்டில் 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவதாக இருந்தால் அதில் 20 சதவீதமான 200 யூனிட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் 800 யூனிட் ஆகிறது. ஆனால், 2 மாதத்திற்கு அந்த வீட்டில் 850 யூனிட் பயன்படுத்தினால் 800 யூனிட் வரை எப்பொழுதும் வசூலிக்கப்படும் சாதாரண கட்டணமும், மீதியுள்ள 50 யூனிட்டுக்கு கூடுதலாக 50 சதவீத கட்டணமும் வசூலிக்கப்படும் .
கிராமங்களில் 24 மணி நேரம் மின்சாரம்:
நகரங்களில் குறைந்தபட்சம் 20 மணி நேரமும், கிராமங்களில் வீடுகளுக்கு 24 மணி நேரமும் மின் சப்ளை வழங்கப்படும்.
கிராமப் பகுதிகளில் தினந்தோறும் பத்து மணி நேரம் மும்முனை மின்சாரமும் (3 phase) 14 மணி நேரம் ஒரு முனை (single phase) மின்சாரமும் வழங்கப்படும். இதனால் விவசாயிகள் பகலில் 6 மணி நேரமும் இரவில் 4 மணி நேரமும் ஆக 10 மணி நேரம் அவர்களது பம்பு செட்டுகளை இயக்கலாம். ஒருமுனை மின்சாரம் வழங்கப்படும்போது விவசாயத்திற்கு மின்சாரம் பயன்படுத்தப்படக்கூடாது.
நகர்களில் 20 மணி நேரம் மின்சாரம்:
நகர்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 20 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
தொழிற்சாலைகளுக்கு 40% மின் வெட்டு:
உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் (எச்.டி.) தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு கேட்பு (டிமாண்ட்) மற்றும் பயனீட்டில் 40 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
தாழ்வழுத்தம் இணைப்புகள் (எல்.டி.-சி.டி.) உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு பயனீட்டில் 20 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
தாழ்வழுத்த (எல்.டி.) மின் இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இரண்டு மாதங்களில் 2,000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் அளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.
மாலையில் வீடுகளுக்கு மட்டுமே மின்சாரம்:
மாலை நேரங்களில் (6 மணி முதல் 10 மணி வரை) அனைத்து வீடுகளுக்கும், பொது இடங்களில் உள்ள விளக்குகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டி இருப்பதால் அனைத்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்பு உள்ள தொழிற்சாலைகளும், வணிக வளாகங்களும் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது.
மீறினால் அவர்களுடைய மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
தனியார் விழாக்களுக்கு மின்சாரமில்லை:
ஆலயத் திருவிழாக்கள் தவிர தனியார் நடத்தும் விழாக்களுக்கு ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
யாருக்கு விலக்கு?:
அனைத்து மருத்துவமனைகள், அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு கட்டிடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், ரெயில்வே இணைப்புகள், செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், தொலை தொடர்பு இணைப்பகங்கள், கல்வி நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், பால் குளிர்ப்படுத்தும் நிறுவனங்கள் ஆகிய அத்தியாவசிய மின் இணைப்புகளுக்கு மின் வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இதற்கு அனைத்து பொதுமக்களும், தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும், குறிப்பாக விவசாயிகளும், அரசுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications