லண்டன் மேடையில் ராகம் வராமல் பாதியில் பாட்டை நிறுத்திய ஸ்வேதா மோகன்.. உடனே இளையராஜா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: "இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்காக நான் லண்டனில் இருந்தேன். ஜானகி அம்மா மறைந்த சில மணி நேரங்களிலேயே மேடையில் பாடியது உணர்வுப்பூர்வமாக தனக்கு பெரும் சுமையாக இருந்தது, ஜானகியின் புகழ்பெற்ற பாடல்களின் மூலமாகவே அவருக்கு நான் அஞ்சலி செலுத்தினேன்" என்று பிரபல பாடகி ஸ்வேதா மோகன் உருக்கமாய் பதிவிட்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியுடன் நெருங்கிய பழகியவர் பாடகி சுஜாதா மேனன், அவரது மகள் ஸ்வேதா மோகன்... ஆரம்பத்தில் இவர்களுக்குள் இந்த அளவுக்கு நெருக்கம் இல்லையாம்,.. மிகப்பெரிய சீனியர் பாடகி என்ற மரியாதையும், பற்றும், மட்டுமே இருந்துள்ளது. ஆனால், கடந்த 2 வருடமாகத்தான் அளவுகடந்த பாசத்துடன் பழகி வந்திருக்கிறார்கள்.

Swetha Mohan

சுஜாதா மேனன், ஸ்வேதா மோகன்

மைசூருவிற்கும், ஹைதராபாத்திற்கும் நேரில் சென்று ஜானகி அம்மாவை, சுஜாதாவும், ஸ்வேதாவும் சந்தித்து வருவார்களாம். 2 மாதங்களுக்கு முன்புகூட ஜானகி அம்மாவை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. அப்போது நல்ல ஆரோக்கியமாக இருந்துள்ளார்.

பாடகிகள் ஸ்வேதாவும், சுஜாதாவும் , ஜானகி வீட்டுக்கு சென்றால்,சாப்பிட வைக்காமல் விடவே மாட்டாராம். தன் கையாலேயே சாதத்தை உருண்டை உருண்டையாகப் பிடித்து ஊட்டி விட்டுள்ளார் எஸ்.ஜானகி.. அதனால்தான், ஜானகி மரணத்தின்போது, செய்தியாளர்களிடம் பேச முடியாமல், சுஜாதா கதறி அழுதார்.

எனினும், ஜானகி அம்மா இறுதிச்சடங்கில் பாடகி ஸ்வேதா மேனன் உட்பட சிலர் கலந்து கொள்ளாதது சோஷியல் மீடியாவில் விமர்சனமாய் வெடித்தது.. இந்த விமர்சனங்களுக்கு ஸ்வேதாவே ஒரு விளக்கம் தந்துள்ளார்.

லண்டனில் ராஜா சார் கச்சேரி

அதில், "ஜானகி அம்மாவின் இறுதிச்சடங்கிற்கு ஏன் வரவில்லை என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்... அன்றைய தினம் நான் லண்டனில் நடந்த ராஜா சாரின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன்.. ஜானகி அம்மா நம்மை விட்டு பிரிந்த சில மணி நேரங்களிலேயே இசை மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் பெற்ற குழுவாக நாங்கள் மாறினோம்.

அவரை கடைசியாக பார்த்து ஆசி பெற முடியாமல் போய்விட்டது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையெல்லாம் நான் உலகிற்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.. மரத்துப் போன உணர்வுடன் பாடுவதும், அவருடைய காலத்தால் அழியாத பாடல்களைபாடி முடிக்க முயல்வதும், ஒவ்வொரு வரியை பாடும்போதும் அந்த மரணத்தின் உண்மை நிலவரம் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்தது.

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு சொல்கிறேன், இது ஒரு உணர்வுப்பூர்வமாக மிகவும் கடினமான காலம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. அதனால் தயவுசெய்து என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

துக்கம் தொண்டை அடைத்து..

அத்துடன் ஒரு வீடியோவையும் ஸ்வேதா ஷேர் செய்துள்ளார்.. அதில், ஜானகி மரணமடைந்த அன்று ஸ்வேதா மோகன் லண்டனில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் நிலைகுலைந்து பாடிக்கொண்டிருக்கிறார்..

அன்னக்கிளி பாடலின் ஆரம்ப ஹம்மிங்கை ஸ்வேதா பாட ஆரம்பிக்கிறார். ஆனால், அவரால் பாட முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்கிறது.. பாதியிலேயே ஹம்மிங்கை நிறுத்திவிட்டார்.. ஒருசில நொடிகளில், அருகிலிருந்த இளையராஜா ஸ்வேதாவை தேற்றவும், அரங்கத்தில் இருந்தவர்களும் கைகதட்டி ஸ்வேதாவை உற்சாகப்படுத்துகிறார்கள்.. அதன்பிறகே சுதாரித்துக் கொண்டு, அந்த பாட்டை மீண்டும் தொடர்கிறார் ஸ்வேதா.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி கொண்டிருக்கிறார்கள்..ஜானகி அம்மாவின் நினைவுகளையும் புகழையும் பதிவிட்டு கொண்டேருக்கிறார்கள்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+