ஆமா நீங்க சோகமாக இருந்ததுதான் உலகத்துக்கே தெரியுமே! தளபதி கச்சேரி டான்ஸ் போட்டு! திமுக பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது நீங்கள் எத்தனை சோகத்தில் இருந்தீர்கள் என்பது இந்த உலகத்துக்கே தெரியும்" என மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடனமாடிய வீடியோவை எடுத்து போட்டு, திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து திமுக ஐடி விங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆமா நீங்க சோகமா இருந்தது தான் உலகத்துக்கே தெரியுமே..

DMK IT Wing condemns Vijay

ஆடியோ லான்ச், சீமந்தம் வீடு, பிறந்தநாள் கேக் கட்டிங், புதுமனை புகுவிழா, கல்யாண வீடுன்னு ஏக்கப்பட்ட சோக காட்சிய பாத்தோமே என திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தளபதி கச்சேரி பாடலுக்கு விஜய் நடனமாடிய வீடியோவை திமுக ஐடி விங் வெளியிட்டுள்ளதுடன் கவுண்டமணி, சத்யராஜ் காமெடியான அடங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி என்ற புகைப்படத்தையும் போட்டுள்ளனர்.

கரூர் வெண்ணெய்மலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது ஏன் என்பதை விளக்கினார்.

அவர் பேசுகையில் மக்களை சந்திக்க வேண்டும் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காக மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினேன். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என பல்வேறு இடங்களுக்கு நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்தோம்.

அரியலூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டுவிட்டு பெரம்பலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நடக்கும் இடத்திற்கு போறது முன்பு, பெரம்பலூர் போலீஸ் வந்து எங்களிடம், கூட்டம் அதிகமாக இருக்கிறது, வராதீங்கன்னு சொன்னாங்க! போலீஸ் அறிவுறுத்தலை நாம் கேட்டுதானே ஆகவேண்டும்.

அதே நேரத்தில் பெரம்பலூர் மக்களின் பாதுகாப்பையும் மனதில் வைத்துக் கொண்டு ஒரு மனவலியுடன் பெரம்பலூருக்கு போகாமல் திரும்பிவிட்டோம்.

அதன் பிறகு நான் வராததற்காக பெரம்பலூர் தொகுதி மக்களிடம் மன்னிப்பும் கேட்டாகிவிட்டது. அது போல் நாமக்கல்லில் கூட்டம் முடித்துக் கொண்டு கரூருக்கு சென்ற போது அந்த கரூர் போலீஸ் எங்களை அலர்ட் செய்திருக்கலாமே? "இங்கு எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. கன்ட்ரோல் செய்ய முடியவில்லை, வராதீர்கள்" என சொல்லியிருக்கலாமே.

போலீஸ் நினைத்தால் எந்த ஒரு கூட்டத்தையும் ரத்து செய்யலாமே! அதையெல்லாம் செய்யாமல் நெடுஞ்சாலையில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு போலீஸே எங்களை உள்ளே கூட்டிட்டு வந்து விட்ட நாடகம் இருக்கு பாருங்க! நம்பிவிட்டேன், அன்று இருந்த கரூர் போலீஸை முழுசா நம்பிட்டேன்.

கரூரில் பேசிய போது "எங்களை கொண்டு வந்து சேர்த்த காவல் துறைக்கு நன்றி" என்றெல்லாம் சொன்னேன். இப்படி ஒரு நாடகம் நடக்கும் என எனக்கு தெரியாது. இதுக்கெல்லாம் யார் காரணம்? இதை யார் சொல்லி செய்தது? இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க, ஒரு வேளை அப்படி நடந்தால் இப்படி பண்ணுங்க, இப்படி உத்தரவுகளை பிறப்பித்து அழுத்தம் கொடுத்தது யார்?

என் மீது பழியை தூக்கி போடுறாங்க. இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே! இது ஏன் எதனால் நடந்தது, அதன் பின்னணி என்ன என அந்த வலியோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா? என விஜய் கரூர் சம்பவம் குறித்து ஆவேசமாக பேசியிருந்தார். இதை திமுக ஐடி விங் விமர்சித்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+