கரூர் கூட்ட நெரிசல்: 31 குடும்பங்களுக்கு அரசு பணி ஆணை.. யாருக்கு எந்த துறையில் வேலை?
கரூர்: கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக கூட்டத்தின், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கருணை அடிப்படையில் அரசு பணி ஆணையை வழங்கினார். 36 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 31 குடும்பங்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு கருணை தொகை வழங்கப்பட்டது. யார் யாருக்கு எந்த துறையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு, தவெக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் சென்ற நிலையில், விஜய் செல்லவில்லை. தவெக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் நேரில் செல்லவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் முதலமைச்சராகிள்ள நிலையில், சம்பவம் நடைபெற்று 9 மாதங்களுக்கு பிறகு இன்று முதல்முறையாக கரூர் சென்றார். உயிரிழந்த 31 குடும்பங்களுக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கினார். ஒருவருக்கு கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 41 பேரில் சிலர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். குடும்பத்தின் அடிப்படையில் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 31 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் இதற்கான பணி ஆணையை வழங்கினார். 31 பேருக்கு எந்தத் எந்த துறையில் என்னென்ன பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.
31 பேருக்கு எந்த துறையில் பணி
திரு. ஆனந்தஜோதி இளநிலை உதவியாளர் - பள்ளிக் கல்வித் துறை
திருமதி மா. நிவேதா-இளநிலை உதவியாளர் - பள்ளிக் கல்வித் துறை
திருமதி சு. கலைச்செல்வி-அலுவலக உதவியாளர் - மாவட்ட வருவாய் அலுவலகம்
திரு. செ. சதீஷ்குமார்-அலுவலக உதவியாளர் - மாவட்ட வருவாய் அலுவலகம்
திரு. வெ. விமல்-அலுவலக உதவியாளர் - மாவட்ட வருவாய் அலுவலகம்
திருமதி வை. சங்கவி-இளநிலை உதவியாளர் - பள்ளிக் கல்வித் துறை
திரு. பா. ரகுநாதன்-இரவு காவலர் - மாவட்ட வருவாய் அலுவலகம்
திருமதி பெ. செல்வராணி-மசால்ஜி - மாவட்ட வருவாய் அலுவலகம்
திருமதி ச. திவ்யா-இளநிலை உதவியாளர் - பள்ளிக் கல்வித் துறை
திரு. ந. கிருஷ்ணமூர்த்தி-இளநிலை உதவியாளர் - பள்ளிக் கல்வித் துறை
திருமதி மோனிஷா-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி ப. சந்திரகலா-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி ச. மகாலட்சுமி-இளநிலை உதவியாளர் - காவல்துறை
திருமதி பா. தனலட்சுமி-இளநிலை உதவியாளர் - காவல்துறை
திரு. சு. முருகன்-அலுவலக உதவியாளர் - கரூர் மாவட்ட அலுவலகம்
திரு. செ. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் - பதிவுத் துறை
செல்வி ம. ஷர்மிளா-இளநிலை உதவியாளர் - பதிவுத் துறை
செல்வி ச. சந்தியா-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. அஸ்வின்குமரன்-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. ச. சுதன்-அலுவலக உதவியாளர் - கரூர் மாவட்ட அலுவலகம்
திருமதி அகிலா-அலுவலக உதவியாளர் - மாவட்ட வருவாய் அலுவலகம் (ஈரோடு)
திரு. குணசேகர்-இளநிலை உதவியாளர் - பேரூராட்சித் துறை (ஈரோடு)
திரு. ஜெயபிரகாஷ்-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சித் துறை (திருப்பூர்)
திருமதி நிவேதிதா-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திருப்பூர்)
திருமதி தீபலட்சுமி-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி மல்லிகா-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)
திரு. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)
திருமதி ஜோதிஇரவு காவலர் - பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி (சேலம்)
திருமதி ம. பிரீதர்ஷினி-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. க. சக்திவேல்- இளநிலை உதவியாளர் - பள்ளிக் கல்வித் துறை
திரு. ந. யோகேஷ்குமார்- இரவு காவலர் - மாவட்ட வருவாய் அலுவலகம்












Click it and Unblock the Notifications