கரூர் 31 குடும்பங்களுக்கு தான் அரசு வேலையா.. மீதி 5 குடும்பங்களுக்கு ஏன் பணி வழங்கவில்லை?
கரூர்: முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நண்பகல் கரூர் செல்கிறார். கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக கூட்டத்தின், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கருணை அடிப்படையில் அரசு பணி ஆணையை வழங்கினார். 36 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 31 குடும்பங்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு கருணை தொகை வழங்கப்பட்டது. 5 குடும்பங்களுக்கு ஏன் அரசு பணிக்கான ஆணை வழங்கவில்லை என்பது சர்ச்சையாகியுள்ளது. அதற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு, தவெக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் சென்ற நிலையில், விஜய் செல்லவில்லை. தவெக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் நேரில் செல்லவில்லை.

31 குடும்பங்களுக்கு பணி ஆணை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் முதலமைச்சராகிள்ள நிலையில், சம்பவம் நடைபெற்று 9 மாதங்களுக்கு பிறகு இன்று முதல்முறையாக கரூர் சென்றார். உயிரிழந்த 31 குடும்பங்களுக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கினார். ஒருவருக்கு கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 41 பேரில் சிலர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். குடும்பத்தின் அடிப்படையில் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 31 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தான் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மற்ற 4 குடும்பத்தினருக்கு ஏன் பணி ஆணை வழங்கவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், அரசியல் கட்சியினர் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதற்கு, "கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஒரு பெண்ணின் கணவர் காவல்துறையை சேர்ந்தவர். அதனால் அவருக்கு அரசு பணி வழங்கும் தேவை இல்லை. மற்றொருவரின் குடும்பத்தில் யாருக்கு பணி ஆணை வழங்குவது என்பதில் பிரச்சனை நிலவுகிறது.
காரணம் என்ன
இதனால் அவர்கள் குடும்பத்திற்கு இன்று பணி ஆணை வழங்கவில்லை. அவர்கள் குடும்பத்தில் முடிவுக்கு வந்ததும் வழங்கப்படும். அஜிதா என்ற பெண்ணும் உயிரிழந்தார். அவரின் சகோதரர் பெங்களூரில் சொந்தமாக தொழில் செய்கிறார். அதனால் அவர்களுக்கும் பணி ஆணை வழங்கவில்லை. உயிரிழந்த மற்றொருவரின் பெற்றோர் வயது முதிந்தவர்கள். அதனால் அவர்களின் குடும்பத்திற்கும் அரசுப் பணி வழங்கவில்லை. கரூர் கூட்ட நெரிசல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான அரசு பணி நியமனத்தில் வேறு எந்த குழப்பமும் இல்லை" என்றனர்.













Click it and Unblock the Notifications