அதிக மின்சாரம்; கூடுதல் கட்டணம் முறை ரத்து
சென்னை: வீடுகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அதை 20 சதவீதம் அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவோரிடம் 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்,
இரண்டு மாதங்களுக்கு 2,000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் மின் தேவையில் 20 சதவீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என நேற்று முன் தினம் மின்வாரியம் அறிவித்தது.
இதற்கு தமிழகத்தி்ல் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக மின் நிலைமை குறித்து உயர் மட்டக் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், தலைமை செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், எரிசக்தித் துறை செயலாளர் ஸ்மிதா நாகராஜ், தமிழ்நாடு மின் வாரிய தலைவர் மச்சேந்திரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்திற்குப் பின் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
கடந்த காலத்தில் தமிழகத்தில் மின் உற்பத்தித் திட்டங்கள் போதுமான அளவிற்கு நிறுவப்படாத நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டு, மின்வெட்டு செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.
விவசாயிகளையும், வீடுகளையும் பெரும்பாலும் பாதிக்காத வகையில் கிடைக்கும் மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் கடந்த 20ம் தேதி மின் வினியோகக் கட்டுப்பாட்டு முறை அறிவிக்கப்பட்டது.
சீராகவும், சிக்கனமாகவும், மின்சாரம் பயன்படுத்தப்பட்டு அத்தியாவசியமான நிலையில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் அந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆனாலும் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகள் பாதிக்கப்படக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்துவோர் 1.3 கோடி லட்சம் பேர் என்ற எண்ணிக்கையில், அரசு வெளியிட்ட அறிவிப்பால் பாதிக்கப்படுவோர் எனப்படும் எண்ணிக்கை வெறும் 5 லட்சம் பேர்தான்.
எனினும் எதிர்க் கட்சிகளைச் சார்ந்தோர் குரலுக்கு மதிப்பளித்து வீடுகளுக்கு 600 யூனிட் என்பதை மாற்றி, யூனிட் கணக்கு இல்லாமல் எந்த வீடுகளுக்கும் கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொழிற்சாலை, வணிக வளாகங்களுக்கு அறிவிக்கப்பட்ட மின் கட்டுப்பாடு தொடர்கிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications