Gold Price Today: திடீரென மளமளவென சரிந்த தங்கம் விலை.. மாலையில் இன்ப அதிர்ச்சி! சவரனுக்கு ரூ.800 குறைந்தது

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று மாலையில் அதிரடியாக சரிந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. கடந்த 5 நாட்களாக தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்து தினந்தோறும் அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில் இன்று காலையிலும் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து பெரிய அதிர்ச்சி தந்து இருந்தது.

    Advertisement

    இன்று காலையில் தங்கம் விலை ரூ.2,400 உயர்ந்து இருந்த நிலையில் மாலையில் ரூ.800 சரிந்துள்ளது நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    Advertisement

    தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை

    தங்கம் விலை கடந்த 5 நாட்களாகவே தாறுமாக உயர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் இருந்து தங்கம் விலை தொடர்ச்சியாக சரிந்தே வந்தது. இடையில் சில நேரம் உயர்ந்தாலும் பெரிய அளவில் உச்சம் தொடவில்லை. கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 ஆம் தேதி மேலும் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,05,600 என இருந்தது.

    5 நாட்களில் ரூ.8,320 அதிகரிப்பு

    இதனால் தங்கம் விலை மேலும் சரியும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு திடீரென பெரிய ஷாக் கொடுத்தது. அதாவது கடந்த 5 ஆம் தேதி திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சேர்த்து ஒரே நாளில் தங்கம் விலை சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் சட்டென தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,07,840 ஐ தொட்டது.

    Advertisement

    அதன் பிறகாவது சரியாம என எதிர்பார்த்த நிலையில் மேலும் மேலும் தங்கம் விலை உயர்ந்தது. தொடர்ந்து தினம் தினம் பெரிய அளவில் தங்கம் விலை உயர்ந்தது. இப்படியாக கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூபாய் 8,320 (இன்று காலையோடு சேர்த்து) அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள் கடும் கவலையடைந்தனர். இந்நிலையில் சற்று ஆறுதல் தரும் விதமாக மாலையில் தங்கம் விலை சரிந்துள்ளது.

    இன்றைய தங்கம், வெள்ளி விலை

    சென்னையில் இன்று காலை மட்டும் ஒரு சவரன் ரூ.2,400 அதிகரித்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று காலையில் கிராமுக்கு ரூ.300 அதிகரித்த தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    வெள்ளி விலை இன்று காலையில் ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து இருந்த நிலையில் மாலையில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200 (இன்று மாலை)
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,000 (இன்று காலை)
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720

    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    Advertisement

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760

    31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
    30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
    29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
    28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720

    27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
    26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
    25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
    24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840

    23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
    22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
    21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080

    Advertisement

    18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
    17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
    16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
    15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440

    English Summary

    Gold Price Today: Gold prices plummeted sharply this evening, offering a pleasant surprise to jewelry enthusiasts. While prices had been soaring significantly over the past five days—causing daily shocks, including a massive ₹2,400 hike per sovereign this morning—the evening drop came as a welcome turn of events.