தீபாவளி ஓவர்.. சென்னைக்கு கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்! கிளாம்பாக்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 6ம் தேதி தொடங்கிய தீபாவளி கொண்டாட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்பியிருக்கின்றனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நவ.8ம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு சென்ற மக்கள் தற்போது சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக சென்னை ECR, OMR, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம்-செங்கல்பட்டு பைபாஸ் உள்ளிட்டவற்றில் போக்குவரத்து நெரிசல் தொடங்கியிருக்கிறது.

Chennai
நேரம் போக, போக நெரிசல் அதிகரித்துக்கொண்டே வரும். காலையில் வழக்கம்போல 2-5 கி.மீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே, சென்னைக்கு வர திட்டமிடுபவர்கள் ஒருநாள் கழித்து கிளம்பலாம். இல்லையெனில்.. இன்று காலை புறப்பட்டு இரவு வந்து சேர்வதை போல இருந்தால் நெரிசல் இருந்திருக்காது.

ஒவ்வொரு பண்டிகைக்கும் இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமானதாக மாறி வருகிறது. பண்டிகை தொடங்கும்போது சென்னையிலிருந்து புறப்படுபவர்கள், பண்டிகை முடிந்த பின்னர் சென்னைக்கு திரும்பும்போது நெரிசலில் சிக்கிக்கொள்வதும் வாடிக்கையானதுதான். திமுக, அதிமுக ஆட்சியில் பெரியதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தவெக ஆட்சியிலாவது இந்த நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+