மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த காங்கிரஸ்! இனி கட்சியை நம்புவது வேஸ்ட்? இந்த டேட்டாவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு, அதன் நன்கொடையில் கிட்டத்தட்ட 75 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு.. தற்போது காங்கிரஸ் கட்சியின் நன்கொடை விகிதம் மிக கடுமையாக குறைந்திருப்பது, கட்சியின் செல்வாக்கில் அடி விழுந்திருக்கிறதோ? என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

கடந்த 2025-2026ம் ஆண்டு வருவாயை பொறுத்தவரை, மக்களவைத் தேர்தல் நடைபெற்ற இந்த காலத்தில்.. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் ரூ. 517.39 கோடி வருவாய் கிடைத்தது. அத்துடன் ஒப்பிடும்போது தற்போது கிடைத்திருக்கும் வருவாய் நான்கில் ஒரு பங்கு தான்.

Congress donations

கடந்த 12 நிதியாண்டுகளில் தகவல்களின்படி, இதற்கு முன்னர் 2015-16 நிதியாண்டில்.. காங்கிரஸுக்கு இதைவிட கடுமையான நிதி வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அப்போது அக்கட்சியின் நன்கொடை, அதற்கு முந்தைய ஆண்டு விட கிட்டத்தட்ட 86 சதவீதம் குறைந்திருந்தது. இப்படி இருக்கையில் 2023-24ம் ஆண்டு ரூ.281.48 கோடியாக இருந்த நன்கொடை, மக்களவைத் தேர்தல் ஆண்டில் ரூ. 517.39 கோடியாக உயர்ந்து.. பின்னர் தற்போது மீண்டும் சரிந்திருக்கிறது.

மக்களவைத் தேர்தல் சமயத்தில், பாஜக பெற்ற ரூ.20,000 அதிகமான நன்கொடைகளின் மதிப்பு மொத்தம், ரூ. 6074.02 கோடி ஆகும். இது அதே ஆண்டில் காங்கிரஸ் பெற்ற நிதியை காட்டிலும் கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகம்.

கடந்த 12 நிதியாண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது.. ஒவ்வொரு வருடமும், காங்கிரசை விட பாஜகவை அதிக நன்கொடைகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி நிதி சரிவுக்கு முக்கியமான காரணம் 'prudent electrol trust' மூலமாக கிடைத்த நிதி குறைந்ததுதான். கடந்த ஆண்டில் இந்த அறக்கட்டளை மூலம் ரூ.216.34 கோடி கிடைத்த நிலையில்.. இந்த நிதியாண்டில் அது 88% சரிந்து வெறும் ரூ.25 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

ஸ்டார் சிமெண்ட் ரூ.5 கோடி
சஜ்ஜன் பஜன்கா ரூ.4 கோடி
பிரேம்குமார் பஜன்கா ரூ.2 கோடி

என முக்கிய நபர்கள் காங்கிரசுக்கு நிதி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த ரூ.130.69 கோடி என்பது.. ரூ 20,000க்கும் அதிகமான பெரிய நன்கொடைகள் மட்டுமே. இது கட்சியின் ஒட்டுமொத்த வருவாய் கிடையாது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்களின் உறுப்பினர் கட்டணம், சிறிய அளவிலான தொண்டர்களின் நிதி மற்றும் கூப்பன்கள் விற்பனை மூலமாக கிடைத்த வருவாய்கள் ஆகியவை சேராது. உதாரணமாக கடந்த 2024-25 ஆம் ஆண்டில் மட்டும்.. கூப்பன்கள் விற்பனை மூலம் காங்கிரஸுக்கு ரூ.350.12 கோடி வருமானம் கிடைத்திருந்தது.

அதேபோல இதை மற்றொரு கோணத்தில் பார்க்க வேண்டும் எனில்.. தேர்தல் பத்திரங்கள் ஒழிக்கப்பட்ட பிறகு, தற்போதைய நிலவரப்படி 2020-21 நிதியாண்டுக்கு பிறகு காங்கிரஸின் மிக குறைந்த நன்கொடை அளவாக இது இருக்கிறது என்பதுதான்.

ஒவ்வொரு கட்சியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் அரசியலுக்கும் நிதி ஆதாரம் மிக முக்கியமானது. ஆனால், இந்த நிதி ஆதாரமும் எங்கிருந்து வருகிறது? என்பதுதான் முக்கியமான கேள்வி. காங்கிரஸ் கட்சிக்கு நிதி ஆதாரம் குறைந்திருப்பது மக்களிடையே கட்சியின் மீதான செல்வாக்கு இழந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா? அல்லது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் மத்தியில் காங்கிரசுக்கு போதிய அளவு வரவேற்பு இல்லை என்று எடுத்துக் கொள்வதா? என்பதுதான் விவாதமாக வெடித்திருக்கிறது.

காங்கிரஸாக இருந்தாலும்.. பாஜகவை பாஜகவாக இருந்தாலும், இரண்டு பெரும் கட்சிகளும்.. கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், பெரிய பெரிய கம்பெனிகளிடமும் தான் நிதியை கேட்டு பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+