இண்டர்வியூ இல்லை! எக்ஸாம் முடிச்சா போதும்.. ஸ்ட்ரெய்ட்டா வேலை தான்! சர்ப்ரைஸ் கொடுத்த டிஎன்பிஎஸ்சி!

  • சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 2026-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நேர்முகத் தேர்வு இல்லாத பிரிவில் மொத்தம் 839 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    Advertisement

    அரசுத் துறையில் தொழில்நுட்பப் பணியில் சேர விரும்பும் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    இந்த அறிவிப்பில் சாலை ஆய்வாளர் (Road Inspector) பணிக்கு 149 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மேற்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு 129 இடங்கள், உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கு 110 இடங்கள், நீர்வளத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Draughting Officer) பணிக்கு 101 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு ITI தொழிற்பிரிவுகளுக்கான Junior Training Officer (JTO) பணியிடங்களும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

    இதுதவிர பல்வேறு தொழில்நுட்பத் துறைகளுக்கான கூடுதல் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடத்தின் தகுதிக்கேற்ப ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு என்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதி செய்துகொள்வது அவசியம்.

    Advertisement

    இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 2026 ஆகஸ்ட் 15-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    முழு விபரங்களுக்கு இந்த லிங்கை திறக்கவும் - https://www.tnpsc.gov.in/english/Counselling.aspx

    English Summary

    TNPSC has invited applications for 839 technical posts under CTSE 2026. Selection is based on written examination without interview.