மதுரையில் பயங்கரம்! பட்டாசு வெடித்த 16 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு! 4 பேர் கைது
மதுரை: மதுரை கீரைத்துறையில் தீபாவளி பட்டாசு வெடித்தபோது மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் கணவன், மனைவி, 16 வயது மகள் ஆகியோரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரைத்துறை மேலதோப்பு காம்பவுண்ட் பகுதியில் கார்த்தி (35) என்பவர், தீபாவளி அன்று தனது குழந்தைகளுடன் வீட்டின் அருகே பட்டாசு வெடித்துள்ளனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோபி, பொன்ராஜ், தனுஷ் என்கிற தனுக்கோடி, மணிமுருகன் ஆகிய 4 பேர் மது போதையில் வந்து, கார்த்தியின் மனைவி முனீஸ்வரி மற்றும் கார்த்தி 16 வயது மகள் உள்ளிட்டோரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையடுத்து 4 பேரும் வைத்திருந்த அரிவாளால் கார்த்தியை வெட்டியுள்ளனர். அப்போது அதனை தடுக்க சென்ற முனீஸ்வரி மற்றும் மகள் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் காயமடைந்த மூன்று பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறின்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Click it and Unblock the Notifications
