Special trains: சென்னைக்கு டிக்கெட் இல்லையா? நெல்லை, குமரியில் இருந்து இன்று கிளம்பும் சிறப்பு ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக முடிந்துள்ள நிலையில் இன்று சென்னைக்கு புறப்படும் பயணிகளின் வசதிக்காக, நெல்லை, குமரி, தென்காசி, திருச்சியில் இருந்து வரிசையாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை டிக்கெட் கிடைக்காத பயணிகள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும். முன்பதிவில்லா ரயில்களும் இயக்கப்படுவதால் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள முடியும்.

தமிழகம் முழுவதும் தீபாவளி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். சென்னையில் இருந்து சுமார் 15 லட்சம் பேர் வெளியூர்களுக்கு தீபாவளி விடுமுறைக்கு பயணம் செய்துள்ளனர்.

Special trains to depart from Nellai Tenkasi kumari Trichy for Diwali returns Chennai passengers

சிறப்பு பேருந்துகள், ரயில்கள்

இதனால், தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் சிரமம் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களும் இயக்கப்பட்டன. தீபாவளி பண்டிகை நேற்று முடிந்த நிலையில் தமிழகத்தில் இன்று கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் பள்ளி, கல்லுரிகள், அலுவலகங்கள் இயங்கும் என்பதால், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் இன்று சென்னை திரும்ப ஆயத்தமாகி வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு கிளம்பும் ரயில்கள், பேருந்துகள் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் அதிலும் டிக்கெட்டுகள் அனைத்தும் சில நொடிகளில் மாயமானது.

நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்

தனியார் ஆம்னி பேருந்துகளும் பெரும்பாலும் டிக்கெட்டுகள் விற்று விட்டன. ஒரு சில பேருந்துகளில் டிக்கெட்டுகள் காணப்பட்டாலும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் அறிவித்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து இன்று இரவு 7 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06112) 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, பாம்பகோவில் சந்தை, சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து சேரும். திருச்சியில் இருந்து அதிகாலை 3.25 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் தாம்பரத்திற்கு 9 மணிக்கு வந்து சேரும்.

திருச்சி டூ எழும்பூர் சிறப்பு ரயில்

* திருச்சியில் இருந்து இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மெமு ரயிலாக இது இயக்கப்படுகிரது. இந்த ரயில் தாம்பரத்திற்கு அதிகாலை 5.43 மணிக்கு வந்து சேரும்.

செங்கோட்டை, குமரியில் இருந்து சிறப்பு ரயில்

* பிற்பகல் 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்தும் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும்.

* கன்னியாகுமரியில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கு சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லைக்கு நள்ளிரவு 12.55 மணிக்கு வந்து சேரும். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரைக்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து சேரும். திருச்சியில் இருந்து 5.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் தாமபரம் வழியாக எழும்பூருக்கு நண்பகல் 12 மணிக்கு வந்து சேரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+