கர்நாடகாவிற்கு மேலும் 2 துணை முதல்வர்கள்.. யார் அவர்கள்? காங்கிரஸ் மேலிடத்தின் பிளான்

  • பெங்களூர்: கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் டிகே சிவக்குமார், மாஜி முதல்வர் சித்தராமையா ஆகியோர் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து இன்று டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது துணை முதல்வராக இருக்கும் பரமேஸ்வருடன் மேலும் 2 பேரை துணை முதல்வராக்குவது பற்றி காங்கிரஸ் மேலிடம் பரிசீலனை செய்து வருவதாகவும், இந்த லிஸ்ட்டில் இருக்கும் 2 பேரின் பெயர்கள் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை மே மாத இறுதியில் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார். அவருடன் 13 பேர் அமைச்சர்களாகினர். அதில் பரமேஸ்வர் துணை முதல்வரானார்.

    Advertisement

    கர்நாடகாவை எடுத்து கொண்டால் முதல்வர் உடன் சேர்த்து மொத்தம் 34 பேர் அமைச்சரவையில் இடம்பெற முடியும். தற்போது 14 பேர் மட்டுமே உள்ளனர். இன்னும் 20 இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க முதல்வர் டிகே சிவக்குமார், மாஜி முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் இன்று முதலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கேசி வேணுகோபால், கர்நாடகா மேலிட பொறுப்பாளர் ரந்தீர் சுர்ஜேவாலா ஆகியோரை முதலில் சந்தித்து பேச உள்ளனர். அதன்பிறகு இன்று இரவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச உள்ளனர். அப்போது கர்நாடகா அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் அளிக்க வேண்டும்? என்பது இறுதி செய்யப்பட உள்ளது.

    Advertisement

    இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகாவிற்கு கூடுதலாக 2 துணை முதல்வர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது. அதன்படி முதல்வர் டிகே சிவக்குமாருக்கு உதவியாக தற்போது துணை முதல்வராக பரமேஸ்வர் உள்ளார். பரமேஸ்வரை போல் தொழில்துறை அமைச்சர் எம்பி பட்டீல் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளி ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது பற்றி இன்று ஆலோசிக்கப்பட உள்ளது.

    இதில் எம்பி பட்டீல் மற்றும் சதீஷ் ஜார்கிகோளி ஆகிய இருவரும் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்கள் ஆவார். எம்பி பட்டீல் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த லிங்காயத் சமுதாயம் என்பது கர்நாடகாவில் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளது. எம்பி பட்டீலுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதன் மூலமாக லிங்காயத் மக்களின் ஓட்டுகளை கூடுதலாக பெற முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது.

    Advertisement

    அதேபோல் சதீஷ் ஜார்கிகோளி பழங்குடியினத்தை சேர்ந்தவர். இருப்பினும் வடகர்நாடகாவில் அவருக்கு செல்வாக்கு உள்ளது. சித்தராமையாவின் ஆதரவாளர் என்பது மட்டுமின்றி அவருக்கு அடுத்ததாக AHINDA (சிறுபான்மையினர் - எஸ்சி - எஸ்டி- ஓபிசி - பிசி பிரிவினரை அவரணைத்து செல்வது என்று பொருள்) தலைவர் என்ற பெயரை சதீஷ் ஜார்கிகோளி பெற்றுள்ளார். இவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதன் மூலம் இந்த சமுதாயத்தினரின் ஓட்டுகளை தக்கவைக்க முடியும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

    தற்போது வரை 'அஹிண்டா' தலைவராக சித்தராமையா தான் பெயர் பெற்றுள்ளார். இவர் 2028 கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் அவருக்கு பதில் அவரது சீஷ்யன் சதீஷ் ஜார்கிகோளியை பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English Summary

    Chief Minister DK Shivakumar and Ex Chief Minister Siddaramaiah are set to meet the Congress high command in Delhi today to discuss the expansion of the Karnataka cabinet. Amidst this, the party leadership is considering appointing two additional Deputy Chief Ministers.