பாதியில் தொங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்! ரெக்கார்ட் பிரேக் செய்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்போது வரை கூடவில்லை. அதே சமயம் கூட்டத்தொடர் நிறைவுப்பெற்றதாக அறிவிக்கப்படவும் இல்லை. இப்படியே மழைக்கால கூட்டத்தொடர் 88 நாட்களாக பாதியில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னரும் இப்படி மத்திய அரசு செய்திருக்கிறது. ஆனால், 88 நாட்களாக கூட்டத்தொடரை ஒத்தி வைத்தது கிடையாது. அந்த வகையில் இது ரெக்கார்ட் பிரேக் ஆகும்.

Parliament Monsoon session

நாடாளுமன்றத்தில், மழைக்கால கூட்டத்தொடர் கடைசியாக ஆகஸ்ட் 13ஆம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் குடியரசு தலைவர் இன்னும் முறைப்படி கூட்டத்தொடரை நிறைவு செய்யவில்லை. ‌ நாடாளுமன்ற வரலாற்றில் கூட்டத்தொடர் முடிக்கப்படாமல் நீண்ட நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு, சுமார் 87 நாட்களுக்கு கூட்டத்தொடர் அப்படியே ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்னதாக 1987 ஆம் ஆண்டு 76 நாட்களுக்கும்
1989 ஆம் ஆண்டு 54 நாட்களுக்கும்
2006 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தலா 49 நாட்களுக்கும்
1963ஆம் ஆண்டு 41 நாட்களுக்கும்
கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இப்படி கூட்டத்தொடர் முறைப்படி முடிக்கப்படாமல் இருக்கும்போது, அரசாங்கம் நினைத்தால் வெறும் 2 நாட்கள் முன் அறிவிப்புடன், அவசர கூட்டத்தை கூட்ட முடியும். ஆனால், கூட்டத்தொடர் முறைப்படி முடித்துவிட்டு.. புதிய கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

இந்திய அரசியலமைப்பின் படி, கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இத்தனை நாட்களுக்குள் அதை முறைப்படி கூட்ட வேண்டும் என்றோ.. அல்லது முடிக்க வேண்டும் என்றோ.. எந்த ஒரு கால அவகாசமும் கிடையாது. எனவே இது அரசியல் அமைப்பு ரீதியாக தவறானது அல்ல.

இருப்பினும்.. மறுபுறம், அரசாங்கம் ஏன் இப்படி கூட்டத்தொடரை நிறைவு செய்யாமல் ஒத்தி வைத்திருக்கிறது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைக்கும்.. தொகுதி மறுவரை மசோதாவை மீண்டும் கொண்டு வரவும், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக.. மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543 இல் இருந்து 850 ஆக உயர்த்தும் முன்மொழிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றவும், அரசு இந்த சிறப்பு பாதையை பயன்படுத்தலாம் என்று பலரும் கணித்துள்ளனர்.

முன்னதாக இதே மசோதா.. கடந்த ஏப்ரல் 17 அன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால், மசோதா தோல்வி அடைந்தது. இப்படி இருக்கையில் தற்போது கூட்டத்தொடர் முடிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது.. காங்கிரஸ் கட்சியினர் இடையே எதிர்ப்புகளை கிளப்பி இருக்கிறது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்.. தொகுதி மறுவரை மசோதாவை எப்படியாவது நிறைவேற்றுவதற்காக, லோக்சபாவில் பெரும்பான்மையை வாங்குவதற்கு போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்த அவகாசம் தேவைப்படுவதற்காக தற்போது கூட்டத்தொடர் முடிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்று விமர்சித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+