அமெரிக்கா + சீனா.. இரு நாடுகளும் செய்த சம்பவம்.. இனி தங்கம் விலை குறையவே குறையாது! ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை என்றாலும் கூட இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், அதன் விலை குறைய ஏன் வாய்ப்பு இல்லை என்பதையும் விளக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற போது தங்கம் விலை சற்று குறைந்தது. ஆனால், அதன் பிறகு சில நாட்களில் அதிகரிக்கத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை.

anand srinivasan personal finance

ஆனந்த் சீனிவாசன்:

கடந்த 10 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 135 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயரவில்லை என்றாலும் இந்தியாவில் மட்டும் தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அது ஏன் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கலாம். இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "அமெரிக்காவில் இப்போது கடன் பத்திரம் வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்குக் கடன் பத்திர வட்டி உயர்ந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தளவுக்கு உயர்வது இதுவே முதல்முறை. அதாவது அமெரிக்காவில் பணவீக்கம் வரும். இதனால் வட்டி விகிதம் வேகமாகக் குறையாது என்ற தகவல் அங்கு வேகமாகப் பரவிவிட்டது.

அமெரிக்கா:

அங்கு தற்போது மக்கள் செலவுகளும் குறைந்தது போலத் தெரியவில்லை. இதனால் இந்தாண்டு அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு குறைவு! இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக அமெரிக்கப் பங்குச்சந்தை மிகக் கடுமையாகச் சரிந்து வருகிறது. அங்குப் பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துள்ளன. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சீனா:

இது ஒரு பக்கம் இருக்க.. நமது மத்திய ரிசர்வ் வங்கி தங்கமாக வாங்கி குவித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் டேட்டாவின் உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்கு குவித்த நாடுகளில் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால், இங்கு விஷயம் என்னவென்றால் நம்மை விட அதிகமாகச் சீனா தங்கத்தை வாங்கி குவிக்கிறது. சமீபத்தில் கூட அவர்கள் தங்கத்தை வாங்கியுள்ளன. சர்வதேச சந்தையில் இருந்து தங்கத்தை அதிகம் வாங்கி குவிக்கும் நாடாகச் சீனா இருக்கிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரியளவில் குறைய வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு வீடியோவில், "அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதே டிரெண்ட் தொடர்ந்தால் வரும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரும் மார்ச் மாதத்திற்குள் 87ஐ தொட்டுவிடும்.

ரிசர்வ் வங்கி:

இதற்கு முன்பு இருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. ஆனால், இப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிக் குறைத்தாலோ அல்லது குறைப்பேன் என்று சொன்னாலே கூட ரூபாய் மதிப்பு சட்டென சரிந்துவிடும்.

ரிசர்வ் வங்கி 0.5% முதல் 0.75% வரை வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைக்காமல் நாம் மட்டும் இப்படி வட்டி விகிதத்தைக் குறைத்தால் ரூபாய் மதிப்பு தாங்காது. 88க்கு போகக் கூட வாய்ப்பு இருக்கிறது. மறுபுறம் அங்கே டிரம்ப் வந்து வரியைப் போட்டால் டாலர் மதிப்பு மேலும் உயரவே செய்யும்.

தங்கம் விலை அதிகரிக்கும்:

தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்காவிட்டாலும் சஞ்சய் மல்ஹோத்ரா வட்டியைக் குறைத்து, ரூபாய் மதிப்பு சரிவதால் தங்கம் விலை நிலையாக இருக்கும். மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை மீண்டும் போட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+