சவுக்கு சங்கரிடம் ரூ.1 கோடி கேட்டு அருண் ஐபிஎஸ் மனுத்தாக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் போனதன் பின்னணி என்ன?

  • சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரிடம் ரூ. 1 கோடி இழப்பீடு கோரி தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராக இருப்பவர் அருண். இவர் சென்னையில் காவல் ஆணையராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் தமிழ்நாடு காவல்துறை பயிற்சி அகாடமியின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

    Advertisement

    இந்நிலையில் தான் அருண் ஐபிஎஸ் அதிகாரியை குறிவைத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக அவர் யூடியூப் சேனல்களில் ஏராளமாக பேசி உள்ளார்.

    இந்நிலையில் தான் சவுக்கு சங்கருக்கு எதிராக அருண் ஐபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ''சவுக்கு சங்கர் தன்னை பற்றி தொடர்ந்து ஆதாரமற்ற, அவதூறான கருத்துகளை பேசி வருகிறார். இதனால் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது. மன உளைச்சல், மனவேதனை, செய்யும் பணியில் பாதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வருகிறேன். அவரது கருத்துகளில் கண்ணியம், தனிப்பட்ட நபர்களின் சுதந்திரம் மீறப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன் காரணமாக சவுக்கு சங்கரிடம் இருந்து இழப்பீடு பெறும் உரிமை தனக்கு உள்ளது. இதனால் சவுக்கு சங்கரிடம் இருந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர வேண்டும். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து இழப்பீட்டு தொகையை முழுமையாக பெறப்படும் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும்.

    இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கான செலவுகளையும் அவரிடமே பெற வேண்டும். வழக்கு முடியும் வரை தனக்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டுகள் மற்றும் குறியீட்டு சொற்களுடன் செய்திகளை வெளியிடுவதை தடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவதூறு என நான் பட்டியலிட்டுள்ள அனைத்து பதிவுகள், எக்ஸ் பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்கும்படி யூடியூப் மற்றும் எக்ஸ் வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

    Advertisement

    அதேபோல் அவரை பின்தொடர்பவர்கள் மற்றும் அவர்கள் சார்பாக செயல்படும் வேறு எவரும் தனக்கு எதிரான அவதூறு கருத்துகளை வெளியிடவோ, மறுவெளியீடு செய்யவோ, ஒளிபரப்பவோ, பதிவேற்றம் செய்யவோ, பரப்பவோ, பகிரவோ கூடாது என்று நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். பத்திரிகை, டிஜிட்டல் மற்றும் பிற ஊடகங்களில் தனது பெயர், புகைப்படம், தன்னை குறிக்கும் வகையிலான மறைமுக குறியீடுகளுடன் அவதூறு கருத்து பரப்புவதையும் தடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

    English Summary

    Savukku Shankar VS Arun IPS: Arun, a senior IPS officer in Tamil Nadu, has filed a petition in the Madras High Court seeking Rs.1 crore in damages from popular YouTuber Savukku Shankar. Here is the background of the matter.