டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் வரும் புதன்கிழமை அன்று முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்துகிறார். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வர தலைமை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்.எல்.ஏக்கள் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தவெக எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கட்சித் தொண்டர்களே விமர்சித்து வருகின்றனர். இது கட்சித் தலைமைக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

Chief Minister Vijay Calls Urgent Meeting with TVK MLAs Amid Mounting Controversies

தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய நபர் ஒருவரை தவெக எம்.எல்.ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கிய விவகாரம், கள்ளக்கூறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியாகி வரும் தகவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த விசாரணையை தவெக தலைமை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான், வரும் புதன்கிழமை (நவம்பர் 11) முக்கிய ஆலோசனை நடத்துகிறார் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வர தலைமை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கும் வகையில், எம்.எல்.ஏக்கள் அனைவரும் பொதுவெளியிலும் தங்களது தொகுதிகளிலும் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடுமையான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கம் தொடர்பான நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எம்.எல்.ஏக்களுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பான சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஆனபிறகு விஜய், தலைமைச் செயலகத்துக்கு விடுமுறை நாட்கள் தவிர பெரும்பாலும் நாள்தோறும் வருகிறார். ஆனால், கட்சியின் தலைமை அலுவலகமான பனையூருக்கு அவர் சென்று நீண்ட நாட்களாகின்றன. கட்சிப் பணிகளில் விஜய் ஆர்வம் காட்டவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில் தான், தவெக எம்.எல்.ஏக்களை அவசரமாக சென்னைக்கு அழைத்துள்ளார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+