விஜய் செய்த அடிப்படை பிழை.. எம்பிக்கள் கூட்டம் அரசியல் நாடகமா? விளக்கமாக சொன்ன தராசு ஷ்யாம்!

  • சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இன்று நடக்கும் இந்த எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தமாக உள்ள 57 எம்பி-க்களில் 20 பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    Advertisement

    திமுகவின் 30 எம்பிக்கள், அதிமுகவின் 4 எம்பிக்கள், தேமுதிக, பாமக மற்றும் மநீம உள்ளிட்ட கட்சிகளின் 37 எம்பிக்கள் புறக்கணித்துள்ளன. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் 12 எம்பிக்கள், விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் தலா 2 எம்பிக்கள், ஐயூஎம்எல் மற்றும் மதிமுகவின் தலா 1 எம்பிக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    Advertisement

    மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் தவிர்த்த நிலையில், அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டுவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், திமுக கேள்வியின் நியாயத்தை புரிந்து கொள்கிறேன்.

    ஏனென்றால் மத்திய அரசு இதுவரை தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படுகிறதா என்று தெரியவில்லை. ஏற்கனவே மசோதா தோற்கடிக்கப்படுவதற்கு முன் அமித்ஷா பேசிய போது, அனைத்து மாநிலங்களுக்கும் 50% என்ற ப்ரோ ரேட்டை அமல்படுத்துகிறோம்.. ஒரு அரைமணி நேரம் கொடுங்கள்.. திருத்திக் கொண்டு வருகிறோம் என்றார்.

    Advertisement

    மக்கள் தொகை அடிப்படையில் தான் எம்பிக்கள் எண்ணிக்கை என்ற விதி உள்ளது. அதனால் வட இந்திய மாநிலங்களுக்கு அதிக எம்பிக்களும், தென்னிந்திய மாநிலங்களுக்கு குறைந்த எம்பிக்கள் எண்ணிக்கையே உயரும் என்ற அச்சம் தொடக்கம் முதலே நிலவி வருகிறது. இதன் காரணமாகவே எதிர்க்கப்பட்டது. அதனை மாற்றி அனைத்து மாநிலங்களுக்கு 50% உயர்வு என்று கூறினால், அது தமிழ்நாட்டிற்கு லாபம்.

    39 எம்பிக்களுக்கு பதிலாக 59 எம்பிக்கள் வருவார்கள். 6 எம்எல்ஏ தொகுதிகளுக்கு ஒரு எம்பி தொகுதி என்ற முறையில் மாற்றம் வரும். எம்எல்ஏக்கள் தொகுதி உயரும் போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் எண்ணிக்கையும் உயர்த்தப்படும். இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய மசோதாவாக இருக்குமா? இந்தியாவில் தேர்தல் வரைபடம் என்பது எம்பிக்கள் அடிப்படையிலானது.

    Advertisement

    இதில் தவெகவுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது. ஏனென்றால் எம்பிக்கள் உயர்ந்தால், அனைவருக்கும் ஒன்றுதான். அதனால் தவெக அவசர அவசரமாக இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும்? இந்த மசோதா நிறைவேறினால், அடுத்ததாக ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை வரலாம்.. அதில் தவெகவுக்கு ஆர்வம் இல்லை. ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தலும், சட்டசபைத் தேர்தலும் நடந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணமாகவே கூட்டத்தை கூட்டியுள்ளார்கள்.

    தவெகவின் கூட்டத்திலும் அடிப்படை பிழை இருக்கிறது. எம்பிக்கள் நேரடியாக தங்களின் நிலைப்பாட்டை கூற முடியாது. கட்சியின் நிலைப்பாடே, எம்பிக்களின் நிலைப்பாடாக இருக்க முடியும். அதனால் கட்சித் தலைமைக்கு தான் கடிதம் அனுப்பி இருக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் மூலமாக எம்பிக்கள் நிலைப்பாட்டை கூற அனுப்பி வைக்கப்பட்டிருப்பார்கள்.

    Advertisement

    தவெகவை பொறுத்தவரை காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப வேண்டும். எனவே தான் கனிமொழி அரசியல் நாடகம் என்று விமர்சித்துள்ளார். பிற மாநிலங்களுக்கு ஏற்றவாறு தமிழ்நாட்டில் எம்பிக்கள் எண்ணிக்கை உயர வேண்டும். தவெக இதனை அரசியல் நாடகமாகவே அரங்கேற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    CM Vijay Basic Mistake: Political Analyst Tharasu Shyam Decodes TVK MPs Meeting for Delimitation bill