புதிய பொதுத்துறை நிறுவனத்தை தொடங்கியது தமிழக அரசு! எதற்காக தெரியுமா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளுக்கு கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரூ.200 கோடிக்கும் மேலான அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனம் ஒன்றை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான கழகம் என்ற புதிய அரசு நிறுவனத்தினை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu government launched a new entity to undertake govt construction projects worth over Rs 200 crore

தமிழ்நாட்டில் 200 கோடிக்கு மேல் அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், இனிமேல் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான கழகம் என்ற புதிய நிறுவனம் தான் இந்த பணியை மேற்கொள்ளும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அறிவிக்கும் கட்டுமான ஒப்பந்தங்களில் பங்கேற்பது, புதிய நகரங்கள், தொழில் மையங்கள், தொழிநுட்ப பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள், வணிக பூங்காக்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்காக இந்த புதிய தமிழ்நாடு உள்கட்டமைப்பு, கட்டுமான கழகம் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

மாநிலத்தில் நடைபெறவுள்ள 200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அரசு கட்டடப் பணிகளை மேற்கொள்ளுதல், பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கிடும் வகையில் கட்டடங்களை உருவாக்குதல், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டடம் கட்டுவதற்குக் கோரப்படும் ஒப்பந்தங்களில் பங்கேற்றல் ஆகியவற்றிற்காக ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (Tamil Nadu Infrastructure and Construction Corporation) நிறுவப்படும்.

இக்கழகம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் உலகத்தரத்துடன் அமைக்கப்படும். இதன்மூலம், பெருநகரங்கள் (Township), தொழில்துறை மையங்கள் (Industrial Hubs), தொழில்நுட்பப் பூங்காக்கள் (Tech Parks), தகவல் தொழில்நுட்ப நகரங்கள் (IT Cities) மற்றும் வணிகப் பூங்காக்கள் (Business Parks) ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். மேலும், இந்நிறுவனத்தின் மூலம் திட்ட மேலாண்மை ஆலோசனை, தரமான எழில்மிகு கட்டிடக்கலை வரைபடங்கள் (Architectural Plan) மற்றும் தரக்கட்டுப்பாட்டு சேவைகள் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+