கோடி கோடியா வாங்கினியானு கேட்டாங்க.. அதான் விளக்கினேன்.. சட்டமன்றத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏ

  • சென்னை: காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. கூட்டணிக்கு பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. தங்களிடம் கோடிகளை கொடுத்து பேரம் பேசியதாக ஐயூஎம்எல் எம்எல்ஏ சையத் ஃப்ரூக் பாஷா கூறினார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலின்போது என்ன நடந்தது, யார் பேரம் பேசினார்கள் என்று சையத் ஃப்ரூக் பாஷா கூறியுள்ளார்.

    Advertisement

    ஐயூஎம்எல் எம்எல்ஏ சையத் ஃப்ரூக் பாஷா சட்டமன்றத்தில் பேசும்போது, "நேற்று முன் தினம் எங்கள் கட்சி சார்பாக திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் நான் தவறான கருத்தை சொன்னதாக சித்தரிக்கிறார்கள். நான் தவறாக பேசவில்லை. எங்கள் தலைவர் சொன்னதைத்தான் பொதுக்குழுவில் பேசினேன். திமுக, அதிமுக இரண்டும் இணைந்து அதிமுகவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

    Advertisement

    ஐயூஎம்எல் பகீர்

    அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. அந்த கொள்கையில் இருப்போரை ஆதரிக்க மாட்டோம். எங்கள் கொள்கையுடன் உடன்படும் தவெகவை ஆதரிப்போம் என்று எங்கள் தலைவர் சொன்னார். அதைத்தான் நான் பொதுக்குழுவில் சொன்னேன். தரகர்கள் வந்து தங்கள் சுயநலத்துக்கு செயல்பட்டதாக பலரும் சொன்னார்கள். எந்தக் கட்சியும் சார்ந்து எதையும் நான் பேசவில்லை. சிலர் கோடி கீடி என்றெல்லாம் சொன்னார்கள்.

    அதற்கெல்லாம் சாயும் கொள்கையை கொண்ட இயக்கம் ஐயூஎம்எல் இல்லை. திராவிட கொள்கையுடன் உள்ள தவெகவுக்கு ஆதரவளிப்பதாக எங்கள் பொதுக்குழுவில் சொன்னேன். இது கொள்கை கூட்டணி. நான் யாரையும் எதிர்த்து பேசவில்லை. நாங்கள் அதிமுக பாஜக கூட்டணியை மட்டுமே எதிர்த்தோம். அதனால் அதிமுகவை முதலமைச்சராக்க முடியாது என்பதை எங்கள் பேராசிரியர் காதர் மொய்தீன் கூறினார். அதைத்தான் நானும் சொன்னேன்.

    Advertisement

    அதிமுக விளக்கம்

    என்னப்பா நீ கோடிக்கணக்கில் வாங்கி விட்டாயமே என்று என் கட்சிக்காரர்களே கேட்டனர். எங்கள் கட்சிட்ககாரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். நாங்கள் கொள்கைரீதியாக பதில் அளிப்பதற்காக, எங்கும் சாய மாட்டோம் என விளக்கமளித்தேன். வேறு எதுவும் நான் தவறாக சொல்லவில்லை. அதிமுக உள்ளிட்ட யாரையும் தவறாக குறிப்பிட்டு பேசவில்லை என்றார்.

    அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்த பதிலில், அதிமுக யாரின் தயவிலும் தமிழகத்தில் கட்சி நடத்தவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். இதை யார் களங்கப்படுத்தினாலும் ஏற்க மாட்டோம். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 1.35 கோடி வாக்குகளுடன் 53 தொகுதிகளை கைப்பற்றியது. யாரின் தயவிலும் ஆட்சியமைக்க நாங்கள் விரும்பவில்லை. திமுக தீயசக்தி என்று எங்கள் தலைவர்கள் கூறினர். அந்த வழியில் இயங்குகிறோம்" என்றார்.

    English Summary

    IUML MLA Syed Farooq Basha clarified his remarks in the Assembly, saying he was responding to questions from his own party members about allegations of receiving crores during the election.