ஹைதராபாத்தில் சொத்து.. தமிழக அமைச்சர்கள் அங்கே பிசினஸ் செய்கிறார்களா? பொன்.ராதாகிருஷ்ணன் பகீர்

  • சென்னை: "தவறின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் தவெக அரசாங்கம் அமைந்துள்ளது. தவறின் அடிப்படையிலேயே இந்த இடைத்தேர்தலும் இப்போது நடக்கிறது. மற்றபடி தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் காணப்படவில்லை" என்று மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாக கூறியிருக்கிறார்.

    Advertisement

    தவெக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன்... கடந்த வாரம் கூட ஒரு பேட்டியில், அதிமுகவில் வெற்றி பெற்றுவிட்டு பிறகு பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தார்.

    Advertisement

    இதுபோன்ற அரசியல் நகர்வுகளையும், இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதையும் கடுமையாக விமர்சித்திருந்த பொன்.ராதா இதுபோன்ற முறைகளை மாற்ற வேண்டும் என்றும், இதற்கென தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

    இந்நிலையில், மீண்டும் விஜய் அரசுக்கு மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.. நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உலக நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால், அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்.

    அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும், தங்களுடைய பிரதான விமான நிலையங்களை பிரமாண்டமாக அமைத்து உள்ளனர்.

    Advertisement

    அதனால் தமிழக முதல்வர் எடுத்தேன், கவிழ்த்தேன் என்றில்லாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைப் போல செயல்படுத்த வேண்டும். அந்த விமான நிலையத்திற்கான இடங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டன. அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தும்போது, அங்கே நிர்க்கதியாக நிற்க விடக்கூடாது.

    அதேபோல இங்கிருக்கக்கூடிய தொழில்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. நம்முடைய மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும், ஏன், தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களும் ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் வீடுகள் வாங்கியதோடு, தொழில்களையும் சர்வ சாதாரணமாக துவக்கி விட்டனர்.

    தமிழ்நாட்டில் இந்த அரசாங்கம் இருக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல கட்சிகள் காரணமாக உள்ளன. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோபாவில் இருந்து கொண்டு, தேர்தலுக்கு பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள். முதலில் பெற்றுக் கொண்டவர்கள், இப்போது கொடுப்பது தவறு என்கிறார்களா?

    Advertisement

    என்னைப் பொறுத்தவரை தவறின் அடிப்படையில் இந்த அரசாங்கம் அமைந்துள்ளது. தவறின் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இல்லை." என்று ஒரே போடாக போட்டுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்..!!

    English Summary

    Hyderabad Property.. Do Tamil Nadu Ministers Have Businesses and Investments There? Pon Radhakrishnan