சென்னை: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்கும் பணிகளை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். இப்படி இருக்கையில் இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு எழுதிய கடிதங்களின் நகல்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(RTI) கீழ் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு.. கடிதத்தின் நகல்கள் கொடுக்கப்படாது என்று கூறியிருக்கிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம், அதன் முழு செயல்பாட்டு திறனை விரைவில் எட்ட இருக்கிறது. இப்படி இருக்கையில், இன்னொரு விமான நிலையம் கட்டாயமாக தேவை. இதை கருத்தில் கொண்டுதான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், பரந்தூரில் உள்ள விவசாயிகளும்.. அவர்களுக்கு ஆதரவாக மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளும் புதிய விமான நிலையம் பரந்தூரில் அமையக்கூடாது என்று போராட்டங்களை நடத்தினர். அப்போது தவெக தலைவராக இருந்த விஜய் இந்த போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று.. நான் ஆட்சிக்கு வந்தால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விட மாட்டேன் என்று கூறியிருந்தார். அவர் சொன்னதை போலவே.. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர்.. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆக.24ம் தேதியன்று சட்டமன்றத்தில் பேசிய அவர், 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அத்றகு பதில் இன்னொரு இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், எந்த இடம் என்பது குறித்து விரைவில் தேர்வு செய்யப்படும் என்று கூறியிருந்தார். இப்படி சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரை மத்திய அரசுக்கு, விமான நிலைய ஆணையத்திற்கு உரிய கடிதத்தை தமிழக அரசு எழுதவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பொதுவாக 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியானால் அதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படியான நடைமுறைக்கு வரும். தவெக அரசு இன்னும் இது குறித்து அரசாணையை வெளியிடவில்லை. ஆனால், விமான நிலைய ஆணையத்திற்கு (AAI) நாங்கள் சொல்லிவிட்டோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இது உண்மை எனில், பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து குறித்து AAI மற்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதங்களின் நகல்களை கொடு என்று RTI-ல் கேட்கப்பட்டன. ஆனால், இது தொடர்பான கடிதங்களின் நகல்கள் கொடுக்கப்படவில்லை. RTI கேள்வியில், "பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மற்றும் விமான நிலையங்கள் ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை அனுப்பவும்" என கோரப்பட்டிருக்கிறது. இந்த கோரிக்கைக்கு, "கோரப்பட்ட தகவல், தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 8(1)(a)-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், "பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியிருக்கிறதா?" என்கிற கேள்விக்கு ஆம் என்று பதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இடம் இன்னும் உறுதியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம்.. நாங்கள் AAI-விடம் சொல்லிவிட்டோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், என்ன சொன்னார்கள்? என்பது குறித்தும், எழுதப்பட்ட கடிதங்களின் நகல்களையும் கொடுக்க மறுக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் இந்த RTI பதில்களை வைத்து குற்றம்சாட்டியுள்ளனர்.சேலம் 8 வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம், தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை .. அபாயகரமான பார்வை
உள்ளதும் போச்சு! பரந்தூர் தொடங்கி.. ஓசூர் வரை! வளர்ச்சி திட்டங்களை முடக்கிய விஜய் அரசு! விமர்சனம்!