தவெக டோட்டல் டேமேஜ்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை இன்னும் ஏன் வச்சுருக்கீங்க.. சண்முகம் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் வேதனையடையும் வகையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண் மாவட்ட ஆட்சியரிடம், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இன்னும் ஏன் கட்சியில் வைத்துள்ளீர்கள் என தவெகவை சண்முகம் விமர்சித்துள்ளார்.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கூட்டணியில் இருந்தால் ஆட்சியை விமர்சிக்க கூடாது என்பது மதிமுகவின் நிலைப்பாடாக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை ஆட்சியாளர்கள் மக்களுக்கு சாதகமான திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்போம். எதிரானது என்றால் வெளிப்படையாக, பளிச்சென்று எங்கள் கருத்துகளை அழுத்தமாக சொல்வோம்.

cpm-shanmugam-slams-tvk-over-kallakurichi-mla-controversy

இவங்க தான் கெட்ட பெயரே

இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு. மதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதை நாங்களும் எடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பது தவறு. நாங்கள் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளை சரி, தவறு என கூறினால் அதற்கான விளக்கங்களை சொல்ல தயாராக உள்ளோம். நாங்கள் எடுத்து சொல்லும் பிரச்சனைகளை பற்றி ஆராயாமல், நீங்கள் எப்படி குறை சொல்லலாம் என்று வைகோ மாதிரியான மூத்த தலைவர் சொல்வது பொறுத்தமானதல்ல.

அவர்கள் கட்சி அணுகுமுறை அவர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். நீங்கள் ஏன் கேள்வி கேட்கறீர்கள் என எங்களை பார்த்து அவர்கள் கேட்க கூடாது. தவெக ஆட்சியமைக்க ஏன் ஆதரவளித்தோம் என்பதற்கான தெளிவாக காரணத்தை பலமுறை சொல்லிவிட்டோம். அந்த அரசியல் நிலைப்பாடு தொடர்கிறது. கூடவே அரசு நிர்வாத்தின் குளறுபடிகள் மீதான விமர்சமும் தொடர்கிறது. துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ நடவடிக்கை தவெக அரசுக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் என்ன செய்யறீங்க

தமிழகமே இதைப்பற்றி பேசுகிறது. இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை சபாநாயகர், எம்எல்ஏ போன்ற பொறுப்புகளில் இருப்போர் மீது தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பது அவசியம். அப்படி எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. பெண் மாவட்ட ஆட்சியருக்கே, ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏவை எல்லாம் இன்னும் எதுக்காக கட்சியில் வைத்துள்ளார்கள் என தெரியவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+