தமிழக அரசின் 22 கோடி நிதி கொள்ளை வழக்கில் திருப்பம்.. ஒரே நிறுவனத்துக்கு 46 முறை சென்ற பணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் ரூ. 22.30 கோடி நிதி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஒரே நிறுவனத்துக்கு பலமுறை பணம் அனுப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.டி.எஃப்.சி. வங்கியின் எஸ்.என்.ஏ. எனப்படும் ஒற்றை கணக்கு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தின் வாயிலாக இந்த மோசடி நடந்துள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், மாவட்டங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்குகளில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதி வரவு வைக்கப்படுவது வழக்கம். அந்த நிதிகள் தேவைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளாக மேற்கொள்ளப்படும்.

22 Crore Tamil Nadu Government Fund Heist 46 Transfers Traced to a Single Firm

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 15-வது நிதிக்குழுவில் சுகாதாரத்துறை மானிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எந்த வங்கிகளில் பராமரிக்கப்படுகிறது.. சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கிக் கிளையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பெயரில் தனி வங்கிக்கணக்கில் பராமரிக்கப்படுகிறது. இந்த வங்கிக்கணக்கிலிருந்து நிதியைப் பெற்று ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவதற்காக, உரிய அனுமதி பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தனித்தனியாக பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டுமே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தான் ஒப்புதல் அளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இந்த வங்கிக்கணக்கில் அத்துமீறி நுழைந்துள்ளனர்., அரசின் அனுமதியின்றி மொத்தம் 22 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 879 ரூபாயை பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மின்னணு முறையில் மாற்றி திருடிவிட்டார்கள்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரிகள் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் ராம்பிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வங்கிக்கணக்குகளிலிருந்து பணம் எந்தெந்த வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது? பணத்தைப் பெற்றவர்கள் யார்? இந்தப் பரிவர்த்தனைகளுக்கு பின்னால் செயல்பட்டவர்கள் யார்? என்பது தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது பணப்பரிவர்த்தனைகளின் விவரங்கள், வங்கிக்கணக்குகள் தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளப் பயன்பாடு, ஐபி முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனர். இந்த விசாரணையின்போது, ஊரக வளர்ச்சித் துறையின் நிதிப் பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இணையதளப் போர்ட்டலுக்குள், சட்டவிரோதமாக ஊடுருவி இந்த மோசடி நடத்தி உள்ளார்கள்.

இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், 15வது நிதிக்குழுவின் சுகாதாரத் துறை மானியங்களுக்காகப் பராமரிக்கப்பட்டு வந்த ஹெச்டிஎப்சி வங்கிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பெயரில், சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கிக் கிளையில் இந்தக் கணக்கு பராமரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஹெச்டிஎப்சி வங்கி கணக்கில் இருந்து 22 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 879 ரூபாய்யை தூக்கி உள்ளனர் . இதற்காக எச்.டி.எஃப்.சி. வங்கியின் எஸ்.என்.ஏ. எனப்படும் ஒற்றை கணக்கு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தின் வாயிலாக நடத்தி உள்ளனர்

Squareuplive.com/rdprd என்ற இணையதளம், லீட் வின்னர் கார்ப் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, அரசின் வங்கிக்கணக்கிலிருந்து மோசடியாகப் பெறப்பட்ட பணம் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் பெயர்களில் உருவாக்கப்பட்ட மேக்கர், செக்கர் பயனர் கணக்குகள் இந்தப் பணப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பயனர் கணக்குகளுடன் தொடர்புடைய பல்வேறு மின்னஞ்சல் முகவரிகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இதன்மூலம், மொத்தம் 46 பரிவர்த்தனைகள் நடந்திருக்கிறது., Heyinz Infrastructure Private Limited, Octave Limited, Mmabs Private Limited, Dreamsuccess, Anora, Trofem, Pchandr Group, Samvyadh Marketing, Krishna Kirana Store, Bharat Grain, M/S K H B Brick Field, Nexvora Commerce Private Limited, NAKSRAJ Tour and Travels உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வங்கிக்கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டிருக்கிறது. ஒரே நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளுக்கு வெவ்வேறு நாட்களில் பலமுறை பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. குறிப்பாக சில நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளுக்கு பலகோடி ரூபாய் மதிப்பிலான தொகைகள் வெவ்வேறு தவணைகளில் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தொடர்ச்சியாக இந்தப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

தமிழ்நாடு அரசு துறையின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் திருடப்பட்டதா? வங்கியின் இணையதளத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதா? அல்லது ஓடிபி உள்ளிட்ட அங்கீகார முறைகளில் ஊடுருவி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது இந்த மோசடி தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 318 (4), 319 (2) ஆகிய பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 43 (ஏ), 66, 66 (சி) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பர் 3ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல்கள் எப்ஐஆரில் இடம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+