ஆம்பூர் அரசுப் பள்ளி.. திருப்பத்தூர் 2-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. கொந்தளித்த பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. இருந்தாலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஆம்பூர் அருகே 2-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்கவும் இந்தியாவில் 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. 18 வயதுக்குக் குறைவான அனைவரும் இச்சட்டத்தின்படி குழந்தைகளாகக் கருதப்படுவார்கள்.

Ambur gov School Teacher Arrest Child Safety

பெண் குழந்தைகள்

பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் நோக்கத்துடன் தவறாக தொடுதல், குழந்தைகளை ஆபாச படங்கள் தயாரிக்கப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, சில கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளிடம் வாக்குமூலம் பெறும்போது அவர்களுக்கு நம்பிக்கையான நபர் உடனிருக்கலாம். விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவரை குழந்தை நேரடியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. குழந்தையின் அடையாளத்தை ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ கைது நடவடிக்கைகள்

அதுமட்டுமல்ல, இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து தெரிந்தவர்கள் புகார் அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு கடுமையான சட்டங்களும், பல்வேறு கட்டுப்பாடுகளும் இருந்தபோதிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலையை ஏற்படுத்துகிறது., தினந்தோறும் போக்சோவில் கைதாகுபவர்களின் எண்ணிக்கையும் பெருகி கொண்டே வருகிறது.. பச்சிளம் குழந்தைகளையும்கூட காமுகர்கள் விட்டு வைப்பதில்லை.. ஒழுக்கத்தை போதிக்கும் பள்ளி ஆசிரியர்களுகூட போக்சோவில் கைதாவது வேதனையை தந்து வருகிறது.

நேற்றுகூட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 2-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் மீது புகார்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் 48 வயதான சரவணகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறான முறையில் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று பள்ளிக்கு வந்த பெற்றோர், ஆசிரியர் மீது புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசாரும், சிங்கப்பெண் படையினரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஆம்பூர் போலீஸ்

இதனிடையே, அங்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மேனகாவும் விசாரணை மேற்கொண்டார். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் சரவணகுமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இதையடுத்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+