ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய விஜய்.. ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம்.. யார் யார் பயன்பெறுவர்?

  • சென்னை: மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மூலமாக 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.110 கோடி நிது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று 30 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். தவெக ஆட்சி அமைந்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்த அமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட் அறிக்கையுடன் ஜெப மாலையையும் கொண்டு வந்தார்.

    Advertisement

    தொடர்ந்து நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், மகளிருக்கான ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலமாக 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்பட உள்ளது. கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று 30 ஆயிரம் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் கால்நடைகள் காப்போம் திட்டத்திற்காக ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது.

    Advertisement

    இதன் மூலமாக பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா முன்னெடுத்தார். முதல் சில ஆண்டுகள் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. அதே ஸ்டைலில் விஜய் செயல்படுவதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Rs.110 Crore for Women’s Goat Rearing Scheme to Benefit 30,000 People announced in the Tamil Nadu Budget 2026