மது பிரியர்களுக்கு ஆப்பு! தமிழகம் முழுவதும் மூடப்படும் டாஸ்மாக் பார்கள்! மதுக்கடைகளுக்கும் பூட்டு?

  • சென்னை: தமிழ்நாடு முழுவதிலும் உள்ள டாஸ்மாக் பார்களை திடீரென மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால்,பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளை, தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்? டாஸ்மார்க் பாருடன் மது கடைகளும் நாளை முதல் பூட்டு போடப்பட்டு மூடப்படும் என பார் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் தலைவர் அன்புசெல்வன் மற்றும் பொருளாளர் ராமநாதன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள்," டாஸ்மாக் மதுபான கடைகளில் உள்ள பார்களை மூடுவதற்கான கால நிர்ணயம் 2025 டிசம்பர் 31- ஆம் தேதியோடு முடிவடைந்தது.

    Advertisement

    இதையடுத்து ஆறு மாத காலம் பார்களை இயக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு, காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இன்று, தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் செயல்பட்டு வரும் பார்களை உடனடியாக மூடும் நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    டாஸ்மாக்

    ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னதாக இது குறித்து பேசிய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், பார்களை மூடுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுவதாகவும் அடுத்த உத்தரவு வரும் வரை பார்களை இயக்கிக் கொள்ளலாம் என கூறியிருந்ததாகவும் மதுபான பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி பார்கள் மூடப்படுவதால், வாடிக்கையாளர்களுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

    Advertisement

    டாஸ்மாக் பார்

    மேலும், உணவுப் பண்டங்களும் பிறப் பொருட்களும் வீணாகி, பொருள் சேதமும் இழப்பும் ஏற்படுவதாக பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தொடர்ந்து நாளை சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மார்க் தலைமை நிர்வாகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது அந்த ஆலோசனையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்? நாளை முதல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் மற்றும் மது கடைகளும் பூட்டு போடப்படும் மூடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    பார்களுக்கான உரிமம்

    கடந்த 2024 ஜனவரி மாதம் இரண்டு ஆண்டு காலத்திற்கு பார்களுக்கான உரிமம் வழங்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த உரிமம் ஜூன் 30 வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிந்ததால், மேலும் நீட்டிப்பு வழங்கப்படாமல் அனைத்து 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    புதிய டெண்டர்

    மூடப்பட்ட பார்கள் அனைத்தும் உடனடியாக திறக்கப்படாது. அரசு புதிய டெண்டர்களை அறிவித்து, அவை இறுதி செய்யப்பட்ட பின்னரே தகுதியான பார்கள் மீண்டும் திறக்கப்படும். மேலும் பார்கள் மூடப்படுவதால், பொதுமக்கள் சாலைகள், பூங்காக்கள் அல்லது இதர பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க காவல்துறை கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

    கடுமையான நடவடிக்கை

    மீறி பொது இடங்களில் மது அருந்துவோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். அதையும் மீறி பொது இடங்களில் மது அருந்துவோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    TASMAC bar owners warn of statewide shutdown, saying liquor shops may also close if demands remain unmet.