Diwali Online Shopping: இந்தியர்கள் தீபாவளிக்கு ஆன்லைனில் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா? ‘சர்ப்ரைஸ்'
சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியர்கள் ஆன்லைனில் அதிகமாக ஆர்டர் செய்த பொருட்கள் என்ன? என்பது பற்றிய முக்கிய டேட்டா வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதுபற்றிய முழு விவரம் வருமாறு:

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒவ்வொருவரும் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகளுடன் கொண்டாடி வருகிறோம்.
பெரும்பாலானவர்கள் வீடுகளில் அசைவம் சமைத்து சாப்பிடும் நிலையில் ஒரு தரப்பினர் ஆன்லைனில் தங்களுக்கு பிடித்த பிரியாணி உள்பட பிற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். தற்போது பொதுமக்களிடம் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வரும் நிலையில் உணவு மட்டுமின்றி தீபாவளியையொட்டி பல்வேறு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு வருகின்றன.
சர்ப்ரைஸ் கிப்ட், இனிப்புகள், பூக்கள், மாலைகளள், அகல் விளக்குகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் அதிகமாக ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தான், இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்தியர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்ன? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை வழங்கி உள்ளது.
'செப்டோ' வெளியிட்டுள்ள டேட்டாவின்படி தீபாவளியையொட்டி மொத்தம் 4.68 லட்சம் விளக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக இனிப்புகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இனிப்புகளில் லட்டு மற்றும் சோன் பப்டி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் லட்டும், கிலோ அடிப்படையில் சோன் பப்டியும் அதிகளவில் ஆர்டர் செய்ப்பட்டுள்ளது.
பூக்கள் மற்றும் மாலைகளுக்கான ஆர்டர்களும் கடந்த ஆண்டைவிட 2.5 மடங்கு அதிகரித்துள்ளன. பண்டிகைக்கான ஆடைகள் மற்றும் பாரம்பரிய அணிகலன்கள் வாங்குவதும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டுக்கான தீபாவளி பரிசுத்தொகுப்புக்கான ஆர்டவர்கள் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
அதேபோல், ஸ்விக்கி 'இன்ஸ்டாமார்ட்டில்' அதிகம் ஆர்டர் செய்யப்பட்டா ஸ்வீட்டாக 'காஜி கத்லி' உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மோதிசார் லட்டு, பீசன் லட்டு உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேபோல் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 'பார்ட்டி' பிளானிங்கிற்கான ஆர்டர் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 162 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, சிற்றுண்டி மற்றும் நொறுக்கு தீனிகளுக்கான ஆர்டர்கள் 42 சதவீதம் உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக தீபாவளி தினத்தின்று காலை 11 மணி முதல் 11.18 மணி வரை அதிகமான ஆர்டர்கள் பதிவாகின. Non Grocery பொருள் என்றால் அதிகளவில் 'டயட் கோக்' ஆர்டரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் துணி, நகைகள் மற்றும் சிகை அலங்கார பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்சஸ், டைனிங் புராடக்ஸ்ட் உள்ளிட்டவையும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 'இன்ஸ்டாமார்ட்டை' பொறுத்தவரை இந்தியாவில் அதிகளவிலான ஆர்டர்கள் ராய்ப்பூர், மதுரை, கவுஹாத்தி, திரிச்சூர், கொல்லம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.
'தன்தேரஸ்' நாளில் தங்கம், வெள்ளி வாங்குவது இந்தியர்களின் பாரம்பரிய வழக்கமாகும். இந்த முறையும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் நவம்பர் 6ம் தேதி அதிகாலை 12 மணி 30 வினாடியில் ஹைதராபாத்தில் இருந்து பூ வடிவமைப்புடன் கூடிய 24 காரட் தங்க நாணயத்திற்கான முதல் ஆர்டர் பதிவானது. அதன்பிறகு கு நான்கு விநாடிகள் கழித்து பெங்களூருவில் இருந்து வெள்ளி நாணயம் ஆர்டர் செய்யப்பட்டது. வாங்கப்பட்ட தங்க நாணயங்களில் மூன்றில் இரண்டு பங்கு பூ வடிவமைப்பைக் கொண்டிருந்தன. வெள்ளி நாணயங்களில் 73 சதவீதம் லட்சுமி, விநாயகர் உருவங்களைக் கொண்டிருந்தன. தங்கம், வெள்ளி நாணயங்களுக்கான ஆர்டர்கள் நவம்பர் 6ம் தேதி மாலை 6.38 மணியளவில் அதிகமாக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
